குறளரசனுக்கு கல்யாணம்: காரணம் என்ன? அன்றே சொன்னது சென்னை விஷன்

மற்ற செய்தி தளங்கள் எல்லாம் இப்போது தான் சிம்புவுக்கு முன்பாக அவரது தம்பி குறளரசன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று சொல்லி வருகின்றன. ஆனால் செய்திகளையும் பின்னணிகளையும் சுவைபட முந்தி தரும் சென்னை விஷன் தான் பிப்ரவரி 21 அன்றே, ‘சிம்புவை ஓவர்டேக் செய்யும் குறளரசன், விரைவில் தம்பிக்கு டும் டும் டும்’ என்று செய்தி வெளியிட்டது.

அந்த தகவலை இப்போ குறளரசனே கன்ஃபர்ம் செய்து இருக்கிறார். “ஏப்ரல் 26-ல் எனக்கு திருமணம் என்பதில் உண்மையில்லை. ஆனால் நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன்,” என்று கூறிய அவர், “எனது திருமண தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்,” என்றும் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் அவரிடம், அண்ணன் சிம்புவுக்கு முன்பாக திருமணம் செய்துகொள்வது பற்றி கேட்டதற்கு, ஒரு புன்னகயுடன், “எனக்கு திருமணம் நடந்து முடிந்தால், அடுத்து அனைவரது கவனமும் சிம்புவின் பக்கம் திரும்பும். எனவே திருமணம் செய்து கொள்வதை தவிர்த்து அவருக்கு வேறு வழி இருக்காது,” என்றார்.

குறளரசன் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய இது நம்ம ஆளு படத்துக்கு இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமாகினார். தொடர்ந்து பல பாலிவுட் படங்களுக்கும் அவர் இசையமைத்து வருகிறார். சிலம்பரசனின் சகோதரி இலக்கியாவுக்கும் திருமணமாகிவிட்டது.

சமீபத்தில் குறளரசன் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். அதைப் பற்றி பேசிய‌ அவருடைய தந்தை டி.ராஜேந்தர், “எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையை கடைபிடிப்பவன் நான். அதனால் குறளரசன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து அவரை இஸ்லாத்தை தழுவ தடை சொல்லவில்லை” என்றார்.

ஒரு முஸ்லிம் பெண்ணுடன் காதலில் இருப்பதாக கூறப்படும் குறள், இனிமேலும் சிம்புக்காக காத்திருக்காம‌ தான் திருமணம் செஞ்சிக்க முடிவெடுத்ததோட மட்டுமில்லாம, இஸ்லாமுக்கும் மாற முடிவெடுத்தாராம்.

அதைத் தொடர்ந்து தான், பெற்றோர் டி ராஜேந்தர், உஷா ஆகியோர் ஆசியோட சமீபத்தில் இஸ்லாத்தை தழுவினாராம். குறளரசன் சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும், சிம்பு நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அது மட்டுமில்லாம, ஆல்பம், இந்தி படத்துக்கு இசையமைப்பதாகவும் சொல்லப்பட்டார்.