சென்னைரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, நரம்பியல் மற்றும் மூளை& முதுகெலும்பு அறுவைசிகிச்சைக்கான பிரத்தியேக சிகிச்சையங்களைத் தொடங்குகிறது

நோயாளிகளைமையப்படுத்திய நரம்பியல் பராமரிப்பில் ஒரு புதிய சகாப்தத்திற்கான முன்னோடி முயற்சி

நரம்பியல் அறிவியலில் சிறந்து விளங்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, சென்னைரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, நரம்பியல் மற்றும் மூளை& முதுகெலும்பு அறுவைசிகிச்சைக்காகச் சிறப்பு சிகிச்சையகங்கள் (Clinics) தொடங்கப்படுவதைப் பெருமையுடன் அறிவிக்கிறது. மேலும் பக்கவாதம் தொடர்பான சிகிச்சைகளில், செயற்கைநுண்ணறிவு (AI) முறையைஅறிமுகப்படுத்துதலும் இதில் அடங்கும். இந்த மாற்றத்தைஏற்படுத்தும் முயற்சி, நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சைநிலைமைகளின் நோயறிதல், சிகிச்சைமற்றும் விரிவான மருத்துவ மேற்பார்வையைமேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மருத்துவமனையின் புத்தாக்கம், நிபுணத்துவம் மற்றும் நோயாளியைமையப்படுத்திய பராமரிப்புக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது

நரம்பியல் பராமரிப்பில் மாற்றத்தைஏற்படுத்தும் அணுகுமுறை

உலகளாவிய அளவில் நரம்பியல் மற்றும் முதுகெலும்பு கோளாறுகள் அதிகரித்து வரும் நிலையில், மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் மருத்துவ நிபுணத்துவத்தைஇணைக்கும் ஒருங்கிணைந்த மருத்துவப் பராமரிப்புக்கான தேவைஅதிகரித்துள்ளது. இவற்றைமனதில் கொண்டு, காவேரி மூளைமற்றும் முதுகெலும்பு பிரிவு (KIBS – Kauvery Institute of Brain and Spine) உருவாக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில், முன்னணி நரம்பியல் நிபுணர்கள், நரம்பியல் அறுவைசிகிச்சையாளர்கள், நரம்பியல் கதிரியக்க நிபுணர்கள், நரம்பியல் உளவியலாளர்கள், தீவிர சிகிச்சைநிபுணர்கள், உடலியக்கச்சிகிச்சையாளர்கள், செவிலியர்கள், இயல்புமீட்பு நிபுணர்கள் என திறமையான மருத்துவக் குழு உள்ளனர். இந்தக் குழு கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் நரம்பியல் அறுவைசிகிச்சைநிபுணர்களில் ஒருவரான மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதரின் தலைமையில், ஒருங்கிணைந்த கூட்டுறவு முயற்சியின் மூலமாக பராமரிப்புக்கு முன்னுரிமைஅளிக்கும் ஒரு தடையற்ற ஒருங்கிணைந்த மாதிரி அமைப்பில் இணைந்துள்ளனர்.
பக்கவாத சிகிச்சையில் செயற்கைநுண்ணறிவு (AI) – ஆரம்ப நிலையிலேயேநோயறிதலில் ஒரு திருப்புமுனை
உலக பக்கவாதம் அமைப்பின் கூற்றுப்படி, 2050 ஆம் ஆண்டுக்குள், உலகளாவிய பக்கவாத பாதிப்பு, 87% குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளில் (LMICs) இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது உலகளவில் இறப்புக்கு இரண்டாவது முக்கிய காரணமாக பக்கவாதம் விளங்குகிறது. மேலும் 25 வயதுக்கு மேற்பட்ட 4 பேரில் ஒருவர், தங்கள் வாழ்நாளில் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கடந்த 10 ஆண்டுகளில் தசாப்தத்தில் பக்கவாத சிகிச்சைமுறைகளில் மிகச் சிறப்பான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் நரம்பு வழியாக செலுத்தப்படும் “உறைவு நீக்க (Clot Buster)” மருந்துகள் மற்றும் மெக்கானிக்கல் த்ரோம்பெக்டமி (Mechanical Thrombectomy) ஆகியவைஅடங்கும். இச்சிகிச்சைகளின் மூலமாக, பக்கவாதத்திற்கு ஆரம்பநிலையிலேயேசிகிச்சைஅளிக்கப்பட்டால் பக்கவாத சேதத்தில் இருந்து மீட்டுப் இயல்பு நிலைக்கு நோயாளிகளைக் கொண்டு வர இயலும். இதன் அடிப்படையில், ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, பல மருத்துவப் பிரிவுகளைச் செயற்கைநுண்ணறிவின் (AI) உதவியுடன் ஒருங்கிணைக்கும் அணுகுமுறையைஅறிமுகப்படுத்தியுள்ளது. மருத்துவ துறையில் திருப்புமுனையைஏற்படுத்தும் இத்தகைய அணுகுமுறை, நரம்பியல் துறையில் முதல் முறையாக நிகழ்த்தப்பட்டிருக்கும் முன்னோடி முயற்சியாகும்.
செயற்கைநுண்ணறிவின் திறன்களைப் பயன்படுத்துவதன் மூலம், மருத்துவர்களால் தற்போது விரைவான, மிகவும் துல்லியமான முடிவுகளைஎடுக்க முடியும். மேலும் முன்கூட்டிய நோயறிதலின் மூலம் நோயாளியைப் பாதிப்பில் இருந்து மீட்டு அவரது உடல்நலனைமேம்படுத்த முடியும். செயற்கைநுண்ணறிவின் உதவியுடன் பொன்னான அவசர நேரத்திற்குள் மேற்கொள்ளப்படும் பக்கவாத சிகிச்சை, ஆரம்பகால உயிர்காக்கும் தலையீடுகளைஆறு மடங்கு வரைஅதிகரிக்கவும், சிகிச்சைநேரத்தை25% க்கும் அதிகமாகக் குறைக்கவும் முடியும் என்று ஆய்வுகள் சுட்டுகின்றன. இதனால் நோயாளிகள், துரிதமாக குணமடைவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.
சிறப்புச் சிகிச்சையகங்களின் நோக்கம்
புதிதாகத் தொடங்கப்பட்ட சிகிச்சையகங்கள் பின்வரும் பகுதிகளில் கவனம் செலுத்தி நிபுணத்துவத்தைவழங்கும்:
● கால்-கைவலிப்பு மற்றும் வலிப்புத்தாக்கக் கோளாறுகள்
● பார்கின்சன்’ஸ் நோய் மற்றும் இயக்கக் கோளாறுகள்
● அசாதாரண முக வலி
● முதுகெலும்பு குறைபாடுகள்

இந்தச் சிகிச்சையகங்களின் தனிச்சிறப்பு என்னவென்றால், பல-நிபுணர் ஆலோசனைஅணுகுமறையாகும். நோயாளிகளின் நிலை, நிபுணர்கள் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டுக் கூட்டாக விவாதித்து, ஒரு பராமரிப்பு திட்டத்தைஇறுதி செய்து, துல்லியமான, முழுமையான தனிப்பட்ட சிகிச்சையைஉறுதி செய்கிறார்கள்.
இந்த மருத்துவமனையில் மேம்பட்ட MRI மற்றும் CT இமேஜிங், டிஜிட்டல் வீடியோEEG கண்காணிப்பு, அறுவைசிகிச்சையில் நரம்பு வழிசெலுத்தல் மற்றும் குறைந்தபட்ச ஊடுருவும் அறுவைசிகிச்சைஉபகரணங்கள் உள்ளிட்ட அதிநவீன நோயறிதல் மற்றும் சிகிச்சைகருவிகள் உள்ளன
ஒருங்கிணைந்த நரம்பியல் பராமரிப்பு – ஒரு கூட்டு அமைப்பு
இந்த சிறப்பு மருத்துவமனைகளின் அடிப்படை, “ஒருங்கிணைந்த நரம்பியல் பராமரிப்பு” ஆகும். இது, பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் கூட்டாக ஒவ்வொரு பிரச்சனையையும் மதிப்பீடு செய்து, சிகிச்சைஅளித்துக் கண்காணிக்கும் ஒரு முன்னோடி அணுகுமுறையாகும். ஆரம்ப ஆலோசனையிலிருந்து இயல்புமீட்பு வரை, நரம்பியல் நோயின் மருத்துவ மற்றும் உளவியல் பரிமாணங்களைநிவர்த்தி செய்யும் நெறிப்படுத்தப்பட்ட, குழு அடிப்படையிலான பராமரிப்பிலிருந்து நோயாளிகள் பயனடைகிறார்கள்.
மருத்துவ சிறப்பும், தொழில்நுட்பத் தலைமைத்துவமும்
ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, அதிநவீன நடைமுறைகளில் திறமையான நரம்பியல் நிபுணர்களையும், நரம்பியல் அறுவைசிகிச்சைநிபுணர்களையும் கொண்ட ஒரு புகழ்பெற்ற குழுவால் பணியாற்றப்படுகிறது.
● எண்டோஸ்கோபிக் மூளைஅறுவைசிகிச்சை
● முதுகெலும்பு அறுவைசிகிச்சையில் குறைந்தபட்ச ஊடுருவல்
● இயக்கக் கோளாறுகளுக்கு ஆழ்ந்த மூளைத் தூண்டுதல் (DBS)
● மருந்துகளைமீறிய வலிப்பு நோய்க்கான மேம்பட்ட சிகிச்சைகள்

இந்த மேம்பட்ட சிகிச்சைகள், உலகளவில் கிடைக்கக்கூடிய மிகவும் பயனுள்ள மற்றும் குறைந்த ஊடுருவும் தீர்வுகளைஅணுகுவதைநோயாளிகளுக்கு உறுதி செய்கின்றன.
ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் கல்வி
மருத்துவ மேன்மைக்கு அப்பால், ஆராய்ச்சி, மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கல்விசார் கூட்டாண்மைமூலம் நரம்பியல் அறிவியலின் எதிர்காலத்தைவடிவமைப்பதில் KIBS உறுதிபூண்டுள்ளது. சிறப்புச் சிகிச்சையகங்கள், மருத்துவ பயிற்சிகளுக்கும், ஆய்வினைநடைமுறைக்கு மாற்றும் முயற்சிகளுக்கும், நரம்பியல் பராமரிப்பில் சமீபத்திய உலகளாவிய கண்டுபிடிப்புகளைநோயாளிகள் அணுகுவதற்கும் உதவும்.
தலைமைத்துவ செய்தி
“நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சைதேவைகளைக் கொண்ட நோயாளிகளுக்குச் சிறந்த சிகிச்சையைவழங்குவதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளில், இந்த சிறப்புச் சிகிச்சையகங்களைத் தொடங்குவது ஒரு மைல்கல் ஆகும். இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிகிச்சையகங்களின் ஒருங்கிணைந்த மருத்துவ அணுகுமுறையால், சமூகத்தில் பொதுவான பிரச்சனைகளாக இருக்கும் ஆனால் சில நேரங்களில் நோயறிதலுக்கும் பராமரிப்புக்கும் சவாலானதாக அமையும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலனடையவார்கள். மேலும் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ற தீர்வுகளைஅவர்களுக்கு வழங்க முடியும்” என்று காவேரி மருத்துவமனையின் மூளைமற்றும் முதுகெலும்பு பிரிவின் குழு வழிகாட்டியும், இயக்குநருமான மருத்துவர் K. ஸ்ரீதர் கூறினார். மேலும், “தொழில்நுட்ப சிறப்பு, கனிவான பராமரிப்பு மற்றும் கூட்டு நிபுணத்துவம் ஆகியவற்றைஇணைத்து, ஒவ்வொரு நோயாளியும் அவர்களின் தனித்துவமான சூழ்நிலைகளுக்கு ஏற்ப சிகிச்சைபெறுவதைஉறுதி செய்வதேஎங்கள் நோக்கம்” என்றார்.
“நரம்பியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் வேகமாக முன்னேறி வருகின்றன. மேம்பட்ட இமேஜிங், நுண்துளைஅறுவைசிகிச்சைமுறைகள் மற்றும் இப்போது செயற்கைநுண்ணறிவு ஆகியவைஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், மூளைமற்றும் முதுகுத்தண்டுத் துறையில் நாங்கள் ஒரு புதிய யுகத்தைஅடைந்துள்ளோம். இந்த தொழில்நுட்பங்கள் எங்களுக்கு அதிக துல்லியத்துடன் நோய்களைகண்டறிய, ஆரம்பத்திலேயேசிகிச்சையளிக்க, மேலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சாத்தியமேஇல்லைஎன கருதப்பட்ட சிகிச்சைகளைக் கூட வழங்க அனுமதிக்கின்றன. காவேரி மருத்துவமனையில், எங்கள் நோக்கம் உலகத் தரத்திலான இந்த சிகிச்சைகளைநம் மக்களுக்கேகொண்டு வந்து, தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் கருணைமிக்க மருத்துவ நிபுணத்துவத்தையும் இணைத்து நோயாளிகளுக்கு சிறந்த பராமரிப்பைவழங்குவதாகும்,” என்று கூறினார் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், இணைநிறுவனர் & நிர்வாக இயக்குநர், காவேரி மருத்துவமனை.

வழங்கப்படும் விரிவான சேவைகள்
ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையின் KIBS, முழு அளவிலான நரம்பியல் சேவைகளைவழங்குகிறது.
● பிரத்தியேக நரம்பியல் நோயறிதல் ஆய்வகங்கள்
● 24/7 கடுமையான பக்கவாதம் மற்றும் நரம்பியல் சேவைகள்
● நரம்பியல் இயல்புமீட்பு மற்றும் உடலியக்க மருத்துவம்
● பேச்சு மற்றும் மொழி தேறுவழி (Therapy)
● நரம்பியல் உளவியல் மற்றும் ஆலோசனை
● நோயாளிக்குக் விழிப்புணர்வு அளித்தல் மற்றும் ஆதரவு குழுக்கள்

Exit mobile version