ராஜா செய்யும் ரவுசு, காண்டாகும் கார்த்தி, நடுவில் சிக்கிய ஸ்டாலின்

பாஜகவின் எச் ராஜா செய்யும் அதிரடிகளை சமாளிக்க முடியாமல் சிவகங்கை தொகுதியில் திணறித் தான் போய் இருக்காராம் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம். ராஜாவை சமாளிக்கறதுக்காகவே ஸ்பெஷல் டீம்களை அமைத்து களம் இறக்கி இருக்காராம்.

சிவகங்கை தொகுதிக்கு கார்த்தியை வேட்பாளராக காங்கிரஸ் தலைமை அறிவிச்சதிலிருந்தே அவரை வெச்சு செய்யும் ராஜா, செட்டிநாட்டு வாரிசுக்கு குடைச்சல் மேல குடைச்சலா கொடுத்துட்டு வர்றார்.

ராஜாவை எப்படி சமாளிக்கலாம்னு கார்த்தி அவங்க அப்பாவும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரத்திடம் ஐடியா கேட்க, அவரின் ஆலோசனைப்படி வியூகங்களை வகுத்து, சில டீம்களை தொகுதியில இறக்கி விட்டிருக்காராம். இது மட்டுமில்லாம, சோசியல் மீடியா செல்லும் ராஜாவுக்கு எதிரா வேலை செஞ்சிட்டடு இருக்காம்.

தேர்தலில் போட்டியிடுவதற்கு மனுதாக்கல் செய்தவர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட‌ பின்னர் நிருபர்களிடம் பேசிய ராஜ, “கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரம் முழுமையாக இல்லை. அதனால் அவரது மனுவை ஏற்க கூடாது என்று ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது,” என்றார்.

மேலும் அவர், “ஆனால் தேர்தல் அதிகாரிகள் அதை ஏற்கவில்லை. தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு துணை முதல்–அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் என்ற தகுதியை தவிர வேறு ஏதுவும் இல்லை என்று மு க ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் அவருக்கு கருணாநிதியின் மகன் என்ற தகுதியை தவிர வேறு என்ன தகுதி உள்ளது. எனவே மற்றவர்களை குறை கூற அவருக்கு தகுதியில்லை,” என்றார்.

பல்வேறு வழக்குகளில் ஜாமீனுக்காக அலைந்துகொண்டிருக்கும் சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் மக்களை எப்படி சந்திப்பார்கள் எனவும் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

“நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என தேர்தல் அறிக்கையில் வெளியிடுவோம். ப சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் பல்வேறு வழக்குகளில் ஜாமீன் வாங்குவதற்காக அலைந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களால் எப்படி மக்களை சந்திக்க முடியும்?. அவர்களிடம் பண பலம் உள்ளது. எங்களிடம் மக்கள் பலம் உள்ளது,” என்றார் ராஜா.

கருணாநிதிக்கு ஸ்டாலின் குறித்து தெரியும். ஸ்டாலினுக்கு போதிய திறமை கிடையாது என்றுதான் அவரை தலைவராக கூட ஆக்காமல் வைத்து இருந்தார். ஸ்டாலினை கடைசிவரை கருணாநிதி முதல்வராக்கவில்லை. அதனால் எனக்கு கருணாநிதியை பிடிக்கும் என்றும் எச் ராஜா கூறியுள்ளார்.