Kanimozhi's Kolkata trip upsets Stalin

கொல்கத்தாவுக்கு போன கனிமொழி, கடுப்பில் ஸ்டாலின்

கனிமொழி தனி ஆவர்தனம் பண்றதுல திமுக தலைமைக்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்லையாம். மத்திய அரசுக்கு எதிரா போராட்டம் பண்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவா ட்வீட் போட்டதோட அமைதி ஆகிடுவார்னு பார்த்தா கனி திடீர்னு கொல்கத்தவுக்கே நேர்ல போய் மமதாவை சந்திச்சது கட்சியில கடுப்பை கிளப்பி இருக்கு.

அது மட்டுமில்லாம, அவர் அதிமுக தலைவர் தம்பிதுரையை பாராட்டி, அதுவும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயோட ஒப்பிட்டு பேசுனதும் கட்சியில எடுபடலியாம்.

ஆனா, சில பேர் என்ன சொல்றாங்கன்னா, தமது ஆதரவையும், கட்சியின் ஆதரவையும் தெரிவிக்கும் பொருட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் தான் கனிமொழியை கொல்கத்தாவுக்கு அனுப்பி வைத்தார், அவங்களுக்கு மத்தியில கருத்து வேறுபாடு எதுவும் இல்லைனு சொல்றாங்க.

தம்பிதுரையைப் பத்தி பேசும் போது, தவறான கட்சியில் சரியான மனிதா் வாஜ்பாய் இருந்ததைப் போன்று தமிழகத்தில் அதிமுகவில் தம்பிதுரை உள்ளதாக கனிமொழி கருத்து தொிவித்துள்ளாா்.

மக்களவை துணைசபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை அண்மை காலமாக பிரதமா் நரேந்திர மோடியையும், மோடி தலைமையிலான மத்திய அரசையும் எதிா்த்து கருத்து தொிவித்து வருகிறாா். தான் கலந்துகொள்ளும் அனைத்து பொதுக்கூட்டங்களிலும் மத்திய அரசை விமா்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளாா்.

இந்த நிலையில், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, “தவறான கட்சியில் வாஜ்பாய் எப்படி இருந்தாரோ அதேபோல் தம்பிதுரை தமிழகத்தில் அ.தி.மு.க-வில் உள்ளார். மத்திய பா.ஜ.க பற்றி தம்பிதுரைக்கு புரிந்த உண்மை விரைவில் அவரது கட்சியினரும் புரிந்துகொள்வர்” எனக் கூறியுள்ளார்.

கனிமொழி, இருமுறை திமுக சார்பில் ராஜ்ய சபா உறுப்பினராக பதவி வகித்திருக்கிறார். அவரது பதவிக் காலம் வருகிற ஜூலையில் முடிகிறது. 2ஜி வழக்கில் இருந்து விடுதலை ஆன கனிமொழி அடுத்தபடியாக நேரடியாக மக்களை சந்தித்து வாக்குகளைப் பெற்று எம்.பி. ஆக விரும்புகிறார்.

இதற்காக கனிமொழி தேர்வு செய்திருக்கும் தொகுதி, தூத்துக்குடினு தகவல்கள் சொல்லுது. சமீபத்தில் அவர் கலந்துகிட்ட ஊராட்சி சபைக் கூட்டங்கள், கிட்டத்தட்ட கனிமொழியின் தேர்தல் பிரசாரமாகவே பார்க்கப்படுகிறது.