உள்ளாட்சி தேர்தல்: கமலின் பக்கா பிளான்

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் வாங்கியதில் உற்சாகத்தில் இருக்கும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், உள்ளாட்சி தேர்தலுக்கு இப்போதிலிருந்தே தயராகி வருகிறார்.

இது குறித்து தன் கட்சியின் முக்கியஸ்தர்களிடம் ஆலோசனையிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் கிராமப்புற வாக்குகளை மக்கள் நீதி மய்யம் இழக்க காரணம் அறிமுகம் இல்லாத வேட்பாளர்கள் அதிகமாக நிறுத்தப்பட்டதே ஆகும்.

இதை உணர்ந்த கமல் இந்த தேர்தலில் உள்ளூரில் அறிமுகமான வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான வேட்பாளர் தேர்வு விரைவில் தொடங்க உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி குழு உருவாக்கப்பட்டு அவர்கள் மூலம் தகுதியான வேட்பாளர்கள் கண்டறியப்பட்டு வருகிறார்கள்.

இந்த வேட்பாளர்கள் தேர்வில் பஞ்சாயத்து கவுன்சிலர் முதல் மேயர் பதவி வரை அனைத்து பதவிகளுக்குமான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இன்னும் இரண்டு மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதால் இப்போதே அதில் கவனம் செலுத்தும்படி நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டுவிட்டாராம் கமல்.

மேலும் கட்சியில் மகளிர் அணி, வக்கறிஞர் அணி இருப்பது போல் இளைஞரணியை உருவாக்க உள்ளாராம் கமல். அந்தப்பதவிக்கு பெரம்பூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய பிரியதர்ஷிணியை செயலாளராக ஆக்கும் எண்ணமும் கமலுக்கு உள்ளதாம்.

இந்நிலையில், வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவர் செ கு தமிழரசன், ‘கமல்ஹாசனின் ‘மக்கள் நீதி மய்யம் உடனான கூட்டணி முடிந்துவிட்டது’ என தெரிவித்தார்.

மேலும் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றாகவே, மக்கள் நீதி மைய்யத்துடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தாகவும் தற்போது, அந்த கூட்டணி முடிந்து விட்டதாகவும் கூறிய தமிழரசன், ‘வரும் உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிக்கவிருப்பதாக கூறினார்.