ஜெயா டிவியில் “கலக்கல் காமெடி கிளப்”

“கலக்கல் காமெடி கிளப்”

ஜெயா டிவியில் கடந்த 75 வாரங்களுக்கு மேல் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் காமெடி  நிகழ்ச்சி “கலக்கல் காமெடி கிளப்” . இந்நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது .

இது மக்களின் பேராதரவு பெற்ற இந்நிகழ்ச்சியில் நடுவராக மதுரை முத்து ,சேது மற்றும் நடிகை மஹேஸ்வரி ஆகியோர் பங்கேற்கின்றனர் .இதில் பலவகைப்பட்ட நகைச்சுவை திறமைசாலிகளை வைத்து ஸ்டேண்டப் காமெடியன் ,குரூப் பெர்பார்மன்ஸ் காமெடியன் (Group performance) என அனுபவம் வாய்ந்த நகைச்சுவை கலைஞர்களை வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சி ..இந்நிகழ்ச்சியை சகாதேவன் இயக்க ,கருத்தாக்கம்- V.முரளிராமன் .

இதில் பலதரப்பட்ட இளம் நகைச்சுவை கலைஞர்களை அறிமுகப்படுத்தும் ஒரே நிகழ்ச்சி“கலக்கல் காமெடி கிளப்”  .இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் நிரஞ்சன் மற்றும் கல்பனா .