Kalaignar TV Pongal Special Press Release and Images

கலைஞர் டிவியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்

கலைஞர் தொலைக்காட்சியில் தமிழர் திருநாள் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.

அதன்படி தை 1 பொங்கல் நாளான செவ்வாயன்று காலை 9 :00 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் இனிய இல்லறம் சிறக்க பெரிதும் துணை நிற்பது மகளிரின் மதிநுட்பமா? ஆடவரின் ஆளுமையா? என்கிற தலைப்பில் சிந்திக்க வைக்கும் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றமும், காலை 10:00 மணிக்கு சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் “டான்” திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு கமல்ஹாசன் நடிப்பில் “இந்தியன் 2” சிறப்பு திரைப்படமும், மாலை 6 மணிக்கு அஜித்குமார் நடிப்பில் “துணிவு” சூப்பர்ஹிட் திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.

அடுத்ததாக, திருவள்ளுவர் தினமான மாட்டுப் பொங்கலன்று காலை 9:00 மணிக்கு கற்றது சமையல் குழுவினர் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் கண்ணாடி பாலத்தில் சமைக்கும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியும், காலை 10:00 மணிக்கு சூரி, சசிகுமார் நடிப்பில் “கருடன்” திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு பிரதீப் ரங்கநாதன், இவானா நடிப்பில் “லவ் டுடே” திரைப்படமும், மாலை 6:00 மணிக்கு சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் “விடுதலை பாகம் 1” திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.

மூன்றாவது நாளான காணும் பொங்கலன்று காலை 9:00 மணிக்கு கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி – நித்யா மேனன் நடிக்கும் “காதலிக்க நேரமில்லை” படக்குழுவினரின் சிறப்பு நேர்காணலும், காலை 10:00 மணிக்கு அருள்நிதி நடிப்பில் “கழுவேத்தி மூர்க்கன்” திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர்.சி நடிப்பில் “”அரண்மணை 3” திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.

Share this:

Exit mobile version