Kalaignar TV New Year 2023 Spl program

கலைஞர் தொலைக்காட்சியில் விக்ரம் நடிக்கும் “கோப்ரா”

கலைஞர் தொலைக்காட்சியில் 2023 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு விக்ரம் நடிப்பில் “கோப்ரா “சூப்பர்ஹிட் திரைப்படமும் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.

அதன்படி வருகிற ஜனவரி 1 ஆம் தேதி காலை 9:00 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் சிந்திக்க வைக்கும் கலகலப்பான சிறப்பு பட்டிமன்றமும், காலை 10:00 மணிக்கு ஆர்யா, பசுபதி நடிப்பில் சார்பட்ட பரம்பரை திரைப்படமும், பிற்பகல் 1:30 மணிக்கு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி மற்றும் பலர் நடிப்பில் கோப்ரா அதிரடி ஆக்க்ஷன்  திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் விக்ரம், இரட்டை வேடங்களில், பல்வேறு தோற்றங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

Share this:

Exit mobile version