Kalaignar TV mega Serial Gowri

கொலை வழக்கில் இருந்து தப்பிப்பாளா துர்கா..?

 கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு “கெளரி” என்கிற புத்தம் புதிய மெகாத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

தொடரில் ஆவுடையப்பன் வீட்டில் ஒருவர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாக துர்காவை கைது செய்யும் போலீசார், துர்காவுக்கு தொந்தரவு கொடுக்க, மறுபுறம் துர்காவை காப்பாற்ற கௌரி பல வகையில் போராட, கெளரியின் முயற்சிக்கு வீணா முட்டுக்கட்டை போட, செய்வதறியாமல் தவிக்கிறாள் கௌரி.

இந்தநிலையில், நம்பிக்கையின் உருவமாய் துர்கா தரப்பு வழக்கறிஞராக கற்பகாம்பாள் என்கிற கதாபாத்திரத்தில் தொடரில் இணைகிறார் நடிகை சுஜிதா. கௌரி, கற்பகாம்பாளிடம் துர்காவை காப்பாற்ற உதவும்படி கெஞ்ச, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே துர்காவுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிறார் கற்பகாம்பாள். துர்கா வழக்கை ரகசியமாக விசாரித்து, பரபரப்பான சூழ்நிலையில் நீதிமன்றத்தில் தனது வாதங்களை கற்பகாம்பாள் முன்வைக்க ஆவுடையப்பன் அதிர்ச்சியடைகிறார்.

இறுதியில், கௌரியின் போராட்டம் வெல்லுமா? பொய் வழக்கில் இருந்து துர்காவை காப்பாற்றுவாரா கற்பகாம்பாள்? என்கிற பரபரப்பான திருப்பங்களுடன் தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

Exit mobile version