*Kalaignar TV Deep Oli Thirunaal Special*

கலைஞர் டிவியின் தீப ஒளித்திருநாள் சிறப்புத் திரைப்படம் “இந்தியன் 2”

கலைஞர் தொலைக்காட்சியில் தீப ஒளி திருநாளை முன்னிட்டு புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கின்றன.

அதன்படி, வருகிற அக்டோபர் 31 வியாழனன்று பிற்பகல் 1:30 மணிக்கு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகிய பிரம்மாண்ட திரைப்படமான “இந்தியன் 2” ஒளிபரப்பாக இருக்கிறது.

1996-ல் வெளியாகி சக்கை போடு போட்ட “இந்தியன்” படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்தியன் படத்தில், தனது மகன் சந்துருவை கொன்ற பிறகு இந்தியன் தாத்தா வெளிநாடு தப்பிச் செல்வது போன்று காட்டப்பட்டிருக்கும். இந்த நிலையில், நாட்டில் நிலவும் அநியாயங்களை தட்டிக் கேட்க  நினைக்கும் இளைஞர்கள், சமூக வலைதளம் மூலம் இந்தியன் தாத்தாவை மீண்டும் இந்தியாவிற்கு அழைக்கின்றனர்.தனது நாட்டில் நிகழும் அநியாயங்களை தட்டிக் கேட்க மீண்டும் மறுபிரவேசம் செய்கிறார் இந்தியன் தாத்தா. அதைத்தொடர்ந்து நடக்கும் கதையே “இந்தியன் 2”-ன் மீதிக்கதை.

அனிருத் இசையத்திரும் இந்த படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, பாபி சிம்ஹா, விவேக் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் நடித்துள்ளனர்.

–Selvaragu-pro

Exit mobile version