காஜலின் கவர்ச்சி, சக நடிகைகள் அதிர்ச்சி

கமர்ஷியல் படங்கள் மட்டுமே செய்ய விரும்பவில்லை என்று கூறிய கையோடு, கவர்ச்சி கடலில் அதிரடியாக குதித்துள்ளார் காஜல் அகர்வால். அவர் சமீபத்தில் எடுத்துக் கொண்ட படு கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படங்கள் ரசிகர்களை பரவசப்படுத்தினாலும், சக நடிகைகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறதாம். காஜலின் போட்டியை எப்படி சமாளிப்பது என்று தங்களின் மேனேஜர்களிடம் தீவிர ஆலோசனையில் ஒரு சில நடிகைகள் ஈடுபட்டிருப்பதாக தகவல் தெரிய வருகிறது.

பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸ் ஜோடியாக காஜல் நடித்துள்ள சீதா என்ற தெலுங்கு படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்த படத்திற்கான புரேமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காஜல் அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.

தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் மற்றும் அரை நிர்வாண செக்ஸி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் காஜல். கலர் கலராக ஆடை அணிந்தும், சிகப்பு நிற உடையில் அரை நிர்வாணக் கோலத்தில் செம்ம செக்சியாக ஃபோஸ் கொடுக்கும் போட்டோக்கள் இளசுகளை குஷிப்படுத்தியுள்ளது.

இதுவரை ஹோம்லியாகவும், குறைந்தபட்ச கிளாமரும் காட்டி வந்த வந்த காஜல், செக்சியாக நடிக்க தான் ரெடி என இயக்குனர்கள், ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு சிக்னல் கொடுத்திருப்பதையே இந்த புகைப்படங்கள் உணர்த்துகின்றன என பலரும் கூறி வருகின்றனர்.

சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், “நான் 15 ஆண்டுகளாக நடித்துகொண்டு இருக்கிறேன். இவ்வளவு நீண்ட எனது சினிமா பயணத்தில் நான் நடித்த கதைகள் மற்றும் கதாபாத்திரங்கள் எனது மனதை தொட்டு இருக்கின்றன. கதை கேட்கும்போதே அந்த கதாபாத்திரத்தில் என்னை நான் கற்பனை செய்து பார்த்துக்கொள்வேன். ஒவ்வொரு கதாபாத்திரமும் புதிய வாழ்க்கையை அனுபவித்ததுபோல் செய்தது,” எனக் கூறியிருந்தார்.

“நடிகர்கள் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து வெளியே வராவிட்டால் புதிய படங்களில் அந்த கதாபாத்திரங்களாக மாறுவது கஷ்டமாகி விடும். எனது மனது மென்மையானது. கோபம் சீக்கிரம் வந்து விடும். அன்பும் அதிகமாக காட்டுவேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எப்படி இருந்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறேன்,” எனவும் காஜல் கூறியிருந்தார்.