தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் (TFPC), தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (FEFSI) கூட்டறிக்கை!

15-09-2025

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், தெரிவித்திருப்பதாவது,

” நீதி மன்ற ஆணையில் இரு தரப்பினருக்கும் இடையிலான சமரசம் ஒப்பந்தம் அவர்களின் 1-1 ஒப்பந்தங்கள் 10.03.2022 முதல் 09.03.2025 வரை இருந்து வந்தது. நடந்துகொண்டிருக்கும் தயாரிப்புகளுக்கான தற்போதைய விதிமுறைகளைப் பராமரிக்கவும், ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் நிலையான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தவும் இரு சாராரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

இந்த ஆவணம் ஒத்துழைப்பு, பரஸ்பர மரியாதை மற்றும் எந்தவொரு ஒத்துழையாமை அழைப்புகளையும் திரும்பப் பெறுதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. செப்டம்பர் 1, 2025 தேதியிட்ட அவர்களின் தீர்வு குறித்து ஒரு கூட்டு செய்திக்குறிப்பு வெளியிடப்படும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கின்ற நீதி மன்ற ஆணைக்கிணங்க இருதரப்பு நிர்வாகிகளும் முக்கியஸ்தர்களும் கலந்து பேசியதன் அடிப்படையில் தமிழ் திரைப்பட துறை நலன் கருதி, உயர்நீதிமன்ற ஆணைக்கிணங்க இனிவரும் காலங்களில் எந்தவித தொய்வும் இன்றி ஏற்கனவே இரு சாராரும் போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தப்படி நடைமுறைப்படுத்தி திரைத் தொழிலை நடத்துவோம் என்றும், திரைத்துறை வளர்ச்சிக்காகவும், தொழிலாளர்கள் நலன் கருதியும், முதல் போடும் தயாரிப்பாளர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவும் இரு தரப்பினரும் இணைந்து பயணிக்கலாம் என்ற முடிவினை எடுத்துள்ளோம்.”

மேலும் திரைத்துறையில் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்ட போது திரைத்துறை நலன் கருதி தாயுள்ளத்தோடு இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த சம்பத்தப்பட்ட அமைச்சருக்கு அறிவுறுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தயாரிப்பளர்கள் சார்பிலும், தொழிலாளர்கள் சார்பிலும், ஒட்டுமொத்த திரைத்துறை சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.


Exit mobile version