*Jaya tv program Vaalu pasanga 50th Episode & Children’s day special

“வாலு பசங்க” 50th Episode & Children’s day special

ஜெயா டிவியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 5:00 மணிக்கு ” வாலு பசங்க ’’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நிரஞ்சனா மற்றும் நிக்கி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் சுட்டிக் குழந்தைகள் பங்குபெற்று அவர்களுடைய சுட்டித்தனமான பேச்சாலும் செயலாலும் அனைவரையும் கவர்ந்து வருகின்றனர்…

தற்போது இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக 50 எபிசோடுகளை கடந்து சிறப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. 50 -வது வார பொன்விழா நிகழ்ச்சியை முன்னிட்டும், வருகின்ற குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சியாகவும் வரும் நவம்பர் 13ம் தேதி ஞாயிறு அன்று ஒளிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் திரை உலகில் குழந்தை நட்சத்திரங்களாக ஜொலித்துக்கொண்டிருக்கும் ஜெய்பீம் புகழ் பேபி ஜோசிகா மாயா, பிகில் மற்றும் மாஸ்டர் பட புகழ் மாஸ்டர்சக்தி ரித்விக், கோமாளி மற்றும் அனந்தம் பட புகழ் மாஸ்டர் பரம், சினம் மற்றும் ஒரு மிருகமாய் மாற பட புகழ் பேபி தேசினா முதலானோர் சிறப்பு விருந்தினர்களாக பங்குபெற்றுள்ளனர்… மேலும் வாலுபசங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் குழந்தைகளும் பங்குகொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக்கியுள்ளனர்.

Share this:

Exit mobile version