Jaya tv program Sunday Thenkinnam

ஞாயிறு தேன்கிண்ணம்

ஜெயா டிவி தொடங்கப்பட்ட காலக்கட்டத்தில் இருந்து திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் ’தேன்கிண்ணம்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது. இதில் பல்வேறு பழம்பெறும் திரை நட்சத்திரங்கள் பங்கேற்று தங்கள் திரையுலக அனுபவங்களையும், தங்களுக்கு பிடித்த பாடல்களையும் நேயர்களோடு பகிர்ந்துவருகின்றனர். பழைய திரைப்பட பாடல் ரசிகர்களிடம் தேன்கிண்ணம் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்நிலையில், தற்போது இந்நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையும் நீட்டிக்கப்பட்டு ‘ஞாயிறு தேன்கிண்ணம்’ என்ற தலைப்பில் காலை 8:00 மணிமுதல் 9:00 மணிவரை ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது. இதில் 1960,70,80,90களில் வெளிவந்த ஹிட்டான பாடல்களுடன், அவை குறித்த அறியப்படாத பின்னணி தகவல்களும் இடம்பெறுகின்றன. இந்நிகழ்ச்சியை உமா மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்குகின்றனர்.

Share this:

Exit mobile version