Jaya tv new year 2023 spl programmes

“அட்டகாசம் அன்லிமிடெட்”

ஜெயா தொலைக்காட்சியில் வரும் ஞாயிறு புத்தன்டு தினத்தன்று பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகும் சிறப்பு  நிகழ்ச்சி “அட்டகாசம் அன்லிமிடெட்”.

நகைச்சுவை கலந்த  ஒரு போட்டிக்கு போட்டி நிகழ்ச்சி… சின்னதிரை நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நன்கு அறியப்பட்ட நட்சத்திரங்கள் மற்றும் சின்னதிரை தொகுப்பாளினிகள்  கலந்து கொண்டு தங்கள்  திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு மாறுபட்ட  நிகழ்ச்சி. போட்டியாளர்கள்  இரு குழுக்களாக  பிரிந்து தங்கள் திறமையை வெளிபடுத்தினர். இந்நிகழ்ச்சியின் தொகுத்துக் வழங்குபவர்  நன்கு அறியப்பட்ட பிரபல தொகுப்பாளர் திரு.கமல் அவர்கள் .

இந்த நிகழ்ச்சியை ஜெயா டிவி யோடு இணைந்து ஐரா நிறுவனத்தின் சார்பில் D.ராஜரத்தினம் தயாரித்து இயக்கிவருகிறார். மகிழ்ச்சியும், கலகலப்பும், நகைச்சுவையும் ஒன்றாய் இணைந்த இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில் புத்தாண்டு தினத்தன்று ஞாயிறு பகல் 12:00 மணிக்கும் அன்று ஒளிபரப்பாக உள்ளது.

                                                           ”50-50”

ஜெயா தொலைக்காட்சியில் வரும் ஞாயிறு புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சியாக, பகல் 1:00 மணிக்கு “50-50” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

சமூக வலைதளங்களில் மற்றும் வெளித்திரையில் நன்கு அறியப்பட்ட இளம் ஜோடிகளான கும்கி புகழ் அஸ்வின் ராஜா அவரது மனைவி வித்யா ஸ்ரீ மற்றும் யூடூபில் பிரபலமாக இருக்கும் இளம் ஜோடிகளான அர்ஜுன் ஜீவிதா, மோனா பெத்துராஜ் மற்றும் சூர்யா பவதாரிணி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டுகள் உட்பட தனிப்பட்ட திரைமைகளை வெளிப்படுத்தினர் . இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் கல்யாணி மற்றும் கார்த்திக் ராமதுரை .  

காதல் ஜோடிகள் தங்கள் காதலர்களுடன் இணைந்து கலக்கும் இந்த நிகழ்ச்சியை மகிழ்ச்சி நகைச்சுவையுடன் தர்ஷன் ரெங்கசாமி இயக்கியுள்ளார் .

Share this:

Exit mobile version