*Jaguar Studios’ Vinod Jain to produce and Ponkumaran to direct Jiiva and Shiva-starrer fun-filled family entertainer ‘Golmaal’*

Actors Jiiva and Shiva will be joining forces for a new film titled ‘Golmaal’, to be produced by Jaguar Studios’ B Vinod Jain who had earlier bankrolled ‘Miruga’ and directed by Ponkumaran. 
Ponkumaran has directed several successful Kannada movies so far. He is a former associate of K Bhagyaraj and K S Ravikumar. 
Speaking about the movie, Ponkumaran said this will be an out and out family entertainer which will attract audiences to theatres and make everyone happy.
“Jiiva and Shiva have very good humour sense and a different magic can be created when they share the screen space. Payal Rajput and Tanya Hope will be the female leads of Golmaal. Murali Sharma, Yogi Babu, Sonia Agarwal, Manobala, Karunakaran, Ramesh Khanna, Naren, George Mariyan, Sanjana Singh, Mottai Rajendran, Panju Subbu, Sadhu Gokila, Vipin Sidharth and KSG Venkatesh and other leading artistes are also part of the cast,” he said.
Ponkumaran further said that Golmaal is a high budgeted Tamil movie which will be fully shot in Mauritius. “Our producer is very happy to invest in this project,” he added.
“Shooting will commence in November and wrap in December. The movie will be released in the first half of 2022,” he said.
The technical crew comprises cinematographer S Saravanan, music composer Arul Dev, editor Don Bosco, art director Siva, lyricists Madhan Karki and Viveka.
M Naresh Jain is the creative producer and M Senthil is the production manager. Designs will be by Tuney. Nikil Murukan is the PRO of the flick.
தமிழ்
*ஜாகுவார் ஸ்டுடியோஸ் வினோத் ஜெயின் தயாரிப்பில் பொன்குமரன் இயக்கத்தில் ஜீவா-சிவா இணைந்து கலக்கவிருக்கும் கலகலப்பான குடும்பத் திரைப்படம் ‘கோல்மால்’*
‘மிருகா’ படத்தை தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோசின் பி வினோத் ஜெயின் அதிக பொருட்செலவில் தயாரிக்கவுள்ள ‘கோல்மால்’ என்ற புதிய திரைப்படத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் சிவா இணைந்து நடிக்கவுள்ளனர். இயக்குநர்கள் கே பாக்யராஜ், கே எஸ் ரவிகுமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்பு கன்னடத்தில் பல வெற்றி படங்களை இயக்கியுள்ள பொன்குமரன் இந்த தமிழ் திரைப்படத்தை இயக்குகிறார்
“முழுநீள நகைச்சுவையுடன் கூடிய குடும்ப பொழுதுபோக்கு படமாக கோல்மால் இருக்கும், இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும், ரசிகர்களை அவர்களது குடும்பத்துடன் திரையரங்கிற்கு வரவழைக்கும்,” என்று பொன்குமரன் தெரிவித்தார்.
“ஜீவாவும் சிவாவும் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். அவர்கள் கூட்டணி அமைக்கும் பொழுது அது இன்னும் சிறப்பாக இருக்கும்.  பாயல் ராஜ்புத் மற்றும் தான்யா ஹோப் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முரளி சர்மா, யோகி பாபு, சோனியா அகர்வால், மனோபாலா, கருணாகரன், ரமேஷ் கண்ணா, நரேன், ஜார்ஜ் மரியான், சஞ்சனா சிங், மொட்டை ராஜேந்திரன், பஞ்சு சுப்பு, சாது கோகிலா, விபின் சித்தார்த் மற்றும் கே எஸ் ஜி வெங்கடேஷ் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர்,” என்று அவர் தெரிவித்தார்.
அதிக பொருட்செலவில் மொரிஷியஸில் ‘கோல்மால்’ முழு படமும் படமாக்கப்படும் என்று பொன்குமரன் மேலும் கூறினார். “இந்த படத்தை தயாரிப்பதற்கு வினோத் ஜெயின் மிக்க மகிழ்ச்சியுடன் முன்வந்துள்ளார்,” என்று இயக்குநர் கூறினார்.
நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கி டிசம்பர் மாதம் நிறைவடையும். 2022-ம் ஆண்டின் முதல் பாதியில் படம் வெளியிடப்படும், என்று அவர் தெரிவித்தார்.
அருள் தேவ் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை எஸ் சரவணன் கையாளவுள்ளார். படத்தொகுப்பை டான் போஸ்கோவும், கலை இயக்கத்தை சிவாவும் மேற்கொள்ள, கவிஞர்கள் மதன் கார்க்கி மற்றும் விவேகா பாடல்களை இயற்றவுள்ளனர்.
எம் நரேஷ் ஜெயின் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஆவார். எம் செந்தில் நிர்வாக தயாரிப்பு பணிகளை மேற்கொள்வார். டூனி வடிவமைப்பு பணிகளை செய்வார். படத்தின் மக்கள் தொடர்பை நிகில் முருகன் கவனிப்பார். 
தயாரிப்பு: ஜாகுவார் ஸ்டுடியோஸ் வினோத் ஜெயின்  கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: பொன்குமரன் 

Share this:

Exit mobile version