குருமா ஆன வர்மா: பாலாவுக்கு எதிராக திரும்பிய பட நிறுவனம், பின்னணியில் விக்ரம்?

தன்னை சேதுவில் ஹீரோவாக்கி திரையுலக வாழ்க்கை கொடுத்த பாலா, தன் மகனுக்கு வில்லன் ஆவாருன்னு கனவுல கூட விக்ரம் நினைக்கலையாம். பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாக இருந்த வர்மா படத்தை கைவிடுவதாக அறிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம் படம் ரிலீசாகாது என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ் திரையுலக வரலாற்றிலியே ஒரு படம், அதுவும் ஒரு பெரிய டைரக்டர் இயக்குன படம், முழுசா தயாரான பிறகு கைவிடப்படுவது இதுவே முதல் முறைன்னு பல பேரு ஷாக்கில் இருக்காங்க. அப்படி என்னதான் நடந்ததுனு விசாரிச்சப்போ, என்ன தெரிய வந்ததுன்னா, ஆரம்பத்துல இருந்தே தயாரிப்பு நிறுவனத்துக்கு பாலா கூட ஒத்துப் போகலையாம். படம் எடுக்கறதுக்கும் ரொம்பா நாள் எடுத்துக்கிட்ட பாலா, படத்தையும் சரியா எடுக்கலன்னு சொல்றாங்க.

முழுசா ரெடியானப்புறம் தான் படத்தை காட்டுவேன்னு பிடிவாதம் பிடிச்ச பாலா, சொன்னபடியே படத்தோட முதல் காபியை தயாரிப்பு நீறுவனம் கிட்ட கொடுத்தாராம். ஆனால், அதை போட்டு பார்த்தவங்களுக்கு ஒரே அதிர்ச்சியாம். தெலுங்கு படமான அர்ஜூன் ரெட்டியோட ரீமேக்கான வர்மா, அந்த படம் மாதிரியே இல்லையாம்.

உடனே, விக்ரமை கூப்பிட்டு படத்தை போட்டு காமிச்சாங்களாம். அவரும் அப்படியே ஷாக்காகி, இந்த படம் வெளியே வந்தா என் மகனோட திரையுலக வாழ்க்கையே அவ்வளவு தான் என்ற ரேஞ்சுல ஃபீல் பண்ண ஆரம்பிச்சிட்டாராம். அதற்கு பிறகு தான் பணம் செல்வானாலும் பரவாயில்லைனு இப்படி ஒரு முடிவுக்கு வந்தாங்களாம்.

இதுக்கிடையே, பாலா தரப்பு இதையெல்லாம் மறுக்குது. படம் எடுக்க பாலவுக்கு யாரும் கத்து தர தேவையில்லைனு அவங்க சொல்றாங்க. நேற்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இ4 என்டர்டெயின்மெண்ட் அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற தலைப்பில் தயாரித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட படத்தின் இறுதி வடிவம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை.

மேலும் படத்தின் உருவாக்கத்தில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதால், படத்தை கைவிட முடிவு செய்துள்ளோம். மேலும் வர்மா படத்தை துருவ்வை வைத்தே மீண்டும் முதலில் இருந்து எடுக்க முடிவு செய்திருக்கிறோம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும். படத்தில் இடம்பெறும் நடிகர், நடிகைகள், கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும். விரைவில் படப்பிடிப்பை தொடங்கி 2019 ஜூன் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்”னு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை வர்மா என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்த‌னர். பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி வந்த நிலையில இப்படி ஒரு ஆன்டி கிளைமாக்ஸ் ஆகிப்போச்சு.