காதலில் விழுந்தாரா மயிலின் மகள்?

மயிலு என்று பாசமாக தமிழ் ரசிகர்களால் அழைக்கப்பட ஸ்ரீதேவி கடந்த வருடம் திடீரென மறைந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அந்த அதிர்ச்சியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் அவரது குடும்பத்தினர், இப்போது சினிமாவில் முழு கவனம் செலுத்துகின்றனர்.

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அஜித் நடிப்பில் உருவாகும் நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்து வரும் நிலையில், மூத்த‌ மகள் ஜான்வியோ இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந் நிலையில் தான் ஒருவரிடம் ‘ஐ லவ் யூ’ சொல்லியிருப்பதாக ஜான்வியே தெரிவித்துள்ளார்.

“நான் செம்மயாக கடலை போடுவேன். எனக்கு பிறரை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம். அதனால் பேசத் துவங்குவேன்,” என்று ஜான்வி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் அவர், “பசங்க தவறாக புரிந்து கொண்டு ப்ரொபோஸ் செய்தால் சாரி பாஸ், வேறு ஆளை பாருங்க என்று கூறிவிட்டு கிளம்பிவிடுவேன்,” என்று சொல்லியுள்ளார். இதற்கு பிறகு அவர் சொன்னது தான் முக்கியமே.

“எனக்கு பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்ஸ்டாகிராமில் அவரிடம் ஐ லவ் யூ என்று தெரிவித்துள்ளேன். அதை பார்த்துவிட்டு அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை,” என்று கூறியுள்ளார். இது பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

ஜான்வி கபூர் தடக் படம் மூலம் நடிகையானார். மகளின் முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்கியபோது இருந்த ஸ்ரீதேவி படத்தை பார்க்க உயிருடன் இல்லை. அம்மா இல்லாதது என்றுமே என் மனதில் பாரமாக இருக்கும் என்று ஜான்வி அடிக்கடி கூறி வருகிறார். காதல் குறித்து அவர் பேசி வருகிறார்.

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஜான்வி கலந்துகொண்டார். அப்போது நீங்கள் உடுத்திய உடையை மீண்டும் உடுத்துவதால் கேலிக்குள்ளாக்கப் படுகிறீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜான்வி, எனது நடிப்பு பற்றி விமர்சித்தால், அதனை கவனத்தில் எடுத்துக் கொள்வேன். ஆனால் நான் அணிந்திருக்கும் உடை பற்றி விமர்சிக்க, இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.