அரசியலில் குதிக்கும் பிரபல இளம் தமிழ் நடிகை?

தன்னுடைய அழகாலும் நடிப்பாலும் தென்னிந்தியா முழுக்க ரசிகர்களை பெற்றிருக்கும் கீர்த்தி சுரேஷ் பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன.

இதற்கு காரணாம், கீர்த்தி சுரேஷின் தந்தையும் மலையாள சினிமா தயாரிப்பாளருமான சுரேஷ் பாஜகவில் இருப்பதும், அவர், தனது மனைவியும் கீர்த்தியின் தாயாருமான‌ மேனகாவுடன் சமீபத்தில் தில்லியில் மோடியை சந்தித்ததுமே ஆகும்.

இதைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் பாரதிய ஜனதாவில் சேர்ந்துவிட்டதாக எழுந்த சர்ச்சையையடுத்து, மேனகா சுரேஷ் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தமிழில் ரஜினியுடன் நெற்றிக்கண் படத்தில் கதாநாயகியாக நடித்த மேனகா சுரேஷ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “என் கணவர் சுரேஷ் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார். ஆனால் நான் இப்போதுவரை எந்த கட்சியிலும் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.

கீர்த்தியும் இந்த வி‌ஷயத்தில் என்னை மாதிரிதான். கணவர் சார்ந்திருக்கிற கட்சி என்ற முறையில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய டெல்லி சென்று இருந்தேன்.

பிரசாரம் முடிந்த உடன் சினிமா பிரபலங்கள் சிலர் பிரதமர் மோடியைச் சந்திக்க இருக்கிறார்கள். நீங்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டார்கள். சுரேஷ் கோபி, கவிதா என்று எனக்கு அறிமுகமான சிலர் இருந்ததால் நானும் கலந்துகொண்டேன்.

பா.ஜனதா அலுவலகத்திலேயே அந்த சந்திப்பு நடந்தது. குரூப் போட்டோ எடுத்துக் கொண்டோம். அந்த செய்திதான் நடிகை மேனகாவும் பா.ஜனதா கட்சியில் சேர்ந்துவிட்டார் என்ற அர்த்தத்தில் வெளியாகி இருக்கிறது. கொஞ்சம் ஓவராக போய் ‘கீர்த்தியும் பா.ஜனதாவுல சேர்ந்துட்டாங்களாமே’ என்றுகூட விசாரித்திருக்கிறார்கள்.

ஒரு வி‌ஷயத்தை தெளிவாக சொல்லிவிடுகிறேன். எனக்கோ என் மகளுக்கோ அரசியல்ல ஈடுபடணும் என்ற எண்ணம் எல்லாம் இப்போதுவரை இல்லை,” என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால், இப்போது இல்லையென்றாலும், கேரளா சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில் கீர்த்தி பாஜகவில் சேர்ந்து ஒரு முக்கிய பதவியை பெறுவார் என்று கூறப்படுகிறது.