அனைத்திலும் அரசியல் செய்யும் பா ரஞ்சித், கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக குரல் கொடுக்கிறேன் என்னும் பெயரில், சர்ச்சைகளை கிளப்ப அரசியலில் பலர் உள்ள நிலையில், திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித்தும் அந்த வரிசையில் சேர்ந்து விடுவார் போல.

ஏற்கனவே கபாலி மற்றும் காலாவில் தேவையில்லாத சர்ச்சைகளை கிளறிவிட்டதாக ரஜினி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த ரஞ்சித், நேற்று வாக்கு எண்ணிக்கையின் போது சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கடும் இழுபறியை சந்தித்த போது, விசிகவினரே விசனப்படும் அளவுக்கு ட்வீட்டினார்.

“ஆம் எல்லோரையும் போல் வெற்றி தலித்துகளுக்கு அவ்வளவு சுலபம் இல்லை! அது தனித் தொகுதியாக இருந்தாலும்!! #சிதம்பரம்,” என்று ரஞ்சித் கொளுத்தி போட, பல பேர் அவரை கேள்விகளாலும், கேலிகளாலும் துளைத்தனர்.

“எதிரணியில் நின்றவரும் தலித் தானே !!?… திருமாவின் வெற்றி அவசியமானதுதான்… இங்கே ‘தலித்’ என்ற வாதம் தேவைதானா ??…” என ஒருவர் கேட்க, “என்ன தனி தொகுதி அப்போ அங்கு மற்ற சமுகத்தை சார்த்தவர்கள் இல்லையா, ஜாதியை வைத்து பிழைக்கும் கூட்டம்,” என ஒரு அஜித் ரசிகர் திட்டினார்.

ரஞ்சித்துக்கு ஆதரவாகவும் ட்வீட்டுகள் குவிந்த்ன. “Indian Constitution படி அது தாழ்த்தப் பட்டோருக்கான உரிமையை கோரும் தொகுதி! அதைத் தான் அவ்வாறு அழைக்கிறது அரசியல் சாசனம்! ஏன்டா அரைவேக்காடா வந்து உயிரை எடுக்குறீங்க!” என்றது ஒரு ட்வீட்.

பின்னர், திருமாவளவன் வெற்றி பெற்றதாக அறிவித்தவுடன், ரஞ்சித், “மகிழ்ச்சி !! இந்த வார்த்தையில் அண்ணன் #திருமா வெற்றியை அளவிடவே முடியாது, அதே போல் வேர்எவர் வெற்றியுடனும்ஒப்பிடமுடியாது!

மிக சுலபமாக அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் நின்று வெற்றிபெற்றிருக்க முடியும்! ஆனால்
எப்போதும் நமக்கு புறக்கணிக்க முடியாத வெற்றி அவசியமாய் இருக்கிறது! ஜெய் பீம்!!,” என ட்வீட்டினார். அதற்கும் எதிர்வினைகள் குவிந்தன.

சிதம்பரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இரு வேட்பாளர்களும் மாறி, மாறி முன்னிலை வகித்தனர். இறுதியில், திருமாவளவன் 5,00,229 வாக்க்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் 497010 வாக்குகள் பெற்றார். கடும் இழுபறிக்கு பிறகு, சுமார் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்.