என்னை அதற்கு அழைக்கிறார்கள், சோனியா அகர்வால் வேதனை

36 வயது ஹீரோவுக்கு எல்லாம் அம்மாவாக நடிக்க என்னை அழைக்கிறார்கள் என வேதனை தெரிவித்துள்ளார், தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர களத்தில் குதித்துள்ள சோனியா அகர்வால்.

சமீபத்தில் வெளியான தடம் மற்றும் அயோக்யா படங்களில் நடித்த சோனியா, “தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறேன். சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் பார்க்க சென்று இருந்தேன். அங்கு ரசிகர்கள் என்னை சூழ்ந்துகொண்டனர்.

இது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆனால் சினிமாத்துறையினர் என்னை ஒரு மும்பை பெண்ணாகவே பார்க்கின்றனர். சிலர் என்னை மும்பைக்கே திருப்பி அனுப்ப முயற்சிக்கின்றனர். நான் முதன்மை வேடத்தில் நடித்த தனிமை என்ற படம் வெளியானது.

படத்தின் தயாரிப்பாளர் அனுபவம் வாய்ந்தவர். இருந்தாலும் அந்த படத்தில் ரிலீசில் சிக்கல் ஏற்பட்டது. தியேட்டர்கள் சரியாக கிடைக்கவில்லை. ஆனால் படத்தின் சிக்கல்களுக்கு நானும் காரணம் என்று கிளப்பிவிட்டார்கள். தனிமை நல்ல தரமான கதையம்சம் உள்ள படம்.

இதுபோன்ற கதைகள் எனக்கு அதிகம் வருவதில்லை. எனக்கு இப்போது 36 வயது ஆகிறது. ஒரு பையனுக்கோ சிறுமிக்கோ அம்மாவாக நடிக்க நான் தயார். ஆனால் இயக்குனர்கள் என்னை என் வயதையொத்த ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க கேட்கிறார்கள். இது என்னை எரிச்சலாக்குகிறது.

தடம் படத்தில் அருண் விஜய்யின் சிறுவயது அம்மாவாக நடித்தேன். அதற்கே முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. கதையை முழுமையாக கேட்டபிறகு என் வேடத்துக்கான முக்கியத்துவம் கருதி ஒப்புக் கொண்டேன். அயோக்யா விஷாலின் படம். என்னுடைய படம் அல்ல. எனவே ஒரு காட்சியில் வந்து சென்றேன்,” என்கிறார்.

காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். இவரை அறிமுகப்படுத்தியது இயக்குனர் செல்வராகவன். அதன் பிறகு சோனியா அகர்வால், தம், கோவில், 7ஜி ரெயின்போ காலனி, மதுர உள்பட பல படங்களில் நடித்தார்.

செல்வராகவனுக்கும், நடிகை சோனியா அகர்வாலுக்கும் காதல் கொண்டேன் படத்திலிருந்தே காதல் இருந்து வந்தது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் செல்வராகவனை சோனியா திருமணம் இனிதே நடந்தது. ஆனால், பின்னர் சில பல காரணங்களுக்காக இருவரும் பிரிந்து விட்டனர்.

சமீபத்தில் சோனியா அகர்வால் அளித்த பேட்டியில், இப்போ செல்வராகவனை மிஸ் பண்றீங்களான்னு கேட்கப்பட்ட கேள்விக்கு,
ரொம்ப மிஸ் பண்றேன்னு சொல்ல முடியாது. ஆனா, மிஸ் பண்றேன் என கூறினார். அதோடு நிற்காமல், செல்வாவின் நினைவு இன்னும் எனக்குள் இருக்கிறது. அவரிடம் எனக்கு மிகவும் பிடித்ததே அவரது வெகுளித்தனம் தான் என்றார்.