‘சிண்ட்ரெல்லா’ என்கிற பெயருக்காகவே நடித்தேன் : நடிகை ராய் லட்சுமி

எஸ். எஸ். ஐ புரொடக்சன் தயாரிப்பில் வினூ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி பிரதான வேடம் ஏற்று நடித்துள்ள ‘சிண்ட்ரெல்லா’ திரைப்படம் செப்டம்பர் 24-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. 
இந்தப் படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட படக் குழுவினர் சென்னையில் பத்திரிகை மற்றும் ஊடகங்களுடன் கலந்துரையாடினர். 
இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் டிரெய்லர், பாடல்கள் மற்றும் ஸ்னீக் பீக் காட்சிகள் திரையிடப்பட்டன.
அதைத்தொடர்ந்து படக்குழுவினர் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் 
இசையமைப்பாளர் அஸ்வமித்ரா கூறுகையில், 
“கபிலன் வைரமுத்து மற்றும் என் மனைவி ஜெயந்தி எழுதியது என படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன. படத்தில் ராய் லக்ஷ்மி  மற்றும் சாக்ஷி  ஆகியோரின் நடிப்பு பிரமாதமாக வந்துள்ளது.படத்திற்குப் பின்னணி இசை அமைத்த போதே அவர்களின் நடிப்பைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன் இயக்குநர் பன்முகத்திறன் கொண்டவர்.  அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத ஒன்றாக இருந்தது ” என்றார்.
ஒளிப்பதிவாளர் ராமி பேசும்போது,
 “யாமிருக்க பயமே’ படத்துக்குப் பிறகு இது எனக்கு முக்கியமான படம். இந்தப் படக் குழுவினருடன் நான் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.’சிண்ட்ரெல்லா’  தியேட்டர்களில் பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த திரை அனுபவமாக இருக்கும்” என்றார்.

Share this:

Exit mobile version