How Stalin defeated Thirunavukkarasar

திருநாவுக்கரசரை வீழ்த்திய ஸ்டாலின்: திரைமறைவு தில்லாலங்கடிகள்

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் மாற்றப்படலாம் என்று கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், திருநாவுக்கரசர் நீக்கப்பட்டு, தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இதுக்கு காரணம் கட்சியில நிலவி வந்த அதிருப்தி என்று கூறப்பட்டாலும், திமுகவுல இருந்து வந்த பிரஷர் காரணமாத்தான் டில்லி தலைமை திருநாவுக்கரசரை தூக்கிச்சுனு பரவலா பேசிக்கிறாங்க.

திருநாவுக்கரசர் அதிமுக மற்றும் அமமுகவுக்கு ஆதரவா செயல்பட்டு வந்தாருன்னும், தினகரன் கூட கூட்டணிக்கு முயற்சி பண்ணாருன்னும் சொல்லப்படுது. மேலும், திமுக தலைவர் ஸ்டாலினை அவர் பெருசா கண்டுக்கிறது இல்லன்னும் கூறப்படுது.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வர்ற நிலையில, அவர் தலைவரா நீடிச்சா தொகுதி பங்கீடு உட்பட பல விஷயங்கள்ல தர்ம சங்கடமான நிலைமை ஏற்படும்னு நினைச்ச திமுக தலைமை, டில்லி கிட்ட இதை பத்தி பேசுனதாகவும், இதைத் தொடர்ந்தே திருநாவுக்கரசர் மாற்றம்னு அறிவிப்பு வந்ததாகவும் சொல்றாங்க.

தான் தலைவர் ஆனதை தொடர்ந்து பேட்டியளித்த பேட்டியளித்த கே எஸ் அழகிரி, “தமிழகம், புதுச்சேரியில் வரும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற கட்சிகள் வெற்றி பெற பாடுபடுவேன். கட்சியில் இளைஞர்களைச் சேர்க்க செயல் தலைவர்களுடன் சேர்ந்து பாடுபடுவேன். திருநாவுக்கரசுக்கான இடம் எப்போதும் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்”, என்றார்.

மேலும் அவர், “எனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில் காங்கிரஸ் கட்சியின் எளிய தொண்டனாக வாழ்ந்து வருகிறேன். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்னை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமித்து கவுரவித்துள்ளார். அதற்காக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னை அடையாளம் கண்டு பெருந்தலைவர் காமராஜர் அமர்ந்த இடத்தில் என்னை அமர வைத்து இருக்கிறார்கள். அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அகில இந்திய பொதுச் செயலாளர் முகுல்வாஸ்னிக் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றி,” என்றார்.

முக்கியமா, திமுகவை பத்தி பேசும் போது, அவர், “தமிழ்நாட்டில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி என்பது இயற்கையான கூட்டணியாகும். எனவே நாங்கள் தி.மு.க.வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம். தி.மு.க.வுடன் ஒன்று சேர்ந்து தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியிடமும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியிடமும் மிகுந்த மதிப்பும், மரியாதையும், கருத்தொற்றுமையும் கொண்டிருந்தார். இதனால் தேர்தல்களில் அவர் காங்கிரசுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். அதே பாணியில் இப்போது மு.க.ஸ்டாலினும் செயல்பட்டு வருகிறார்.

பிரதமர் வேட்பாளராக ராகுலை, அவர் முன் மொழிந்தது நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களிடம் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே தி.மு.க.வுடன் இணைந்து நாங்கள் செயல்படுவோம்”னு சொன்னார்.