Hon’ble Minister for Information Technology & Digital Services Of Tamil Nadu, Thiru. T. Mano Thangaraj Inaugurates Jio True 5g in 6 Key Cities in Tn

– Jio True 5G expands its footprint in Tamil Nadu with the launch of Coimbatore, Madurai, Tiruchirappalli, Salem, Hosur & Vellore
– ‘Jio Welcome Offer’ users to get Unlimited 5G Data with up to 1 Gbps+ speed

Jio expands the footprint of True 5G services in Tamil Nadu by launching in six key cities namely  Coimbatore, Madurai, Tiruchirappalli, Salem, Hosur & Vellore. The Honourable Minister for Information  Technology & Digital Services, Thiru. T. Mano Thangaraj announced this launch today in Chennai, in the  presence of Dr. Neeraj Mittal, IAS, Additional Chief Secretary, Information Technology & Digital Services  Department, TN Govt.

Jio demonstrated the immersive benefits of 5G in the field of healthcare, through Jio Community Clinic  medical kit, and the revolutionary AR-VR device, Jio Glass. These benefits will bring transformational changes in the lives of people in Tamil Nadu.

Speaking at the event, Honourable IT Minister Thiru. T. Mano Thangaraj said “I am happy to launch Jio’s  True 5G services in Tamil Nadu. 5G services in the long run will bring transformational benefits for people of TN.

Tamil Nadu government has special focus on the start-up ecosystem, and the advent of 5G services in the  state will give a great boost to the start-ups here that are working on new technologies such as IoT,  Blockchain, AI, Machine Learning & Data Analytics in Tamil Nadu.”

Commenting at the occasion, Jio Spokesperson said “We are excited to expand Jio True 5G in six more  cities in Tamil Nadu. Soon, Jio True 5G network will be present across the length and breadth of Tamil  Nadu. By December 2023 every village and town of TN will have Jio’s True 5G services.

With the launch of Jio’s True 5G services, Tamil Nadu is not just getting the best telecommunication  network, it will also open new growth opportunities in the areas of e- governance, education, healthcare, IT  and the SME business. Jio True 5G will also enable citizens and the government to remain connected on  real-time basis and will assist the rapid reach of government schemes to the last mile user.

Jio has invested over Rs. 40,000 crores for deploying the 5G network in Tamil Nadu and provided  employment to almost 1 lakh people in Tamil Nadu, directly and indirectly. This shows our commitment towards the State.

Jio engineers are working round the clock to deliver True-5G to every person in TN because of the  transformational power of this technology and the exponential benefits it can deliver to every person. We  are grateful to the Honourable Chief Minister Thiru M.K. Stalin and the Tamil Nadu government for  extending their support in digitizing Tamil Nadu and taking it forward.”

Starting today, Jio users in the above cities will be invited to the Jio Welcome Offer, to experience  Unlimited Data at up to 1 Gbps+ speeds, at no additional cost.

Jio True 5G has a three-fold advantage that makes it the only TRUE 5G network in India:

1. Stand-alone 5G architecture with advanced 5G network with Zero dependency on 4G network
2. The largest and best mix of 5G spectrum across 700 MHz, 3500 MHz, and 26 GHz bands
3. Carrier Aggregation that seamlessly combines these 5G frequencies into a single robust “data highway” using an advanced technology called Carrier Aggregation


தமிழ்நாட்டில் 6 முக்கிய நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகள்! அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்

– கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், ஓசூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவை அறிமுகத்தின் மூலம் தமிழ்நாட்டில் அதன் செயல் பரப்பை ஜியோ விரிவாக்குகிறது.
– ‘ஜியோ வெல்கம் ஆஃபர்’ பயனாளிகளுக்கு 1 Gbps+ வேகம் வரை வரம்பற்ற 5ஜி டேட்டா கிடைக்கும்

தமிழ்நாட்டில் ட்ரூ 5ஜி சேவைகள் வழங்கப்படும் செயற்பரப்பை ஜியோ  விரிவாக்குகிறது. கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், ஓசூர் மற்றும்  வேலூர் ஆகிய தமிழ்நாட்டின் ஆறு முக்கிய நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகள்  அறிமுகம் செய்யப்படுகின்றன. சென்னை மாநகரில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் மாண்புமிகு அமைச்சர் திரு. T.மனோ தங்கராஜ் ஜியோ  ட்ரூ 5ஜி சேவை அறிமுகத்தை இன்று நடைபெற்ற விழா ஒன்றில் அறிவித்தார். தமிழ்நாடு  அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல்  தலைமை செயலர் டாக்டர். நீரஜ் மிட்டல், ஐஏஎஸ் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தார். 5ஜி சேவைகளின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் பல; சுகாதார பராமரிப்புத் துறையும் இதனால் பயனடையும். ஜியோ கம்யூனிட்டி கிளினிக் மெடிக்கல் கிட் மற்றும் புரட்சிகரமான ஜியோ கிளாஸ் என்ற பெயரிலான AR – VR சாதனம் ஆகியவற்றின் வழியாக சுகாதார சிகிச்சைப் பிரிவில் 5ஜியால் கிடைக்கக்கூடிய சிறப்பான  ஆதாரங்களை ஜியோ செயல்முறை விளக்கத்தின் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
தமிழ்நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான
மாற்றங்களை 5ஜி சேவையின் பலன்கள் கொண்டு வரும்.  இந்த அறிமுக நிகழ்வின்போது தகவல் தொழில்நுட்பத் துறையின் மாண்புமிகு அமைச்சர்
திரு. T. மனோ தங்கராஜ் உரையாற்றுகையில் கூறியதாவது: “தமிழ்நாட்டில் ஜியோவின்
ட்ரூ 5ஜி சேவைகளை தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீண்டகால
அடிப்படையில் 5ஜி சேவைகள் தமிழ்நாடு மாநில மக்களுக்கு நேர்மறையான
மாற்றங்களின் மூலம் பெரும் ஆதாயங்களை வழங்கும்.
ஸ்டார்ட்அப் சூழலமைப்பு மீது தமிழ்நாடு அரசு சிறப்பு கூர்நோக்கத்துடன் செயலாற்றி
வருகிறது. இம்மாநிலத்தில் 5ஜி சேவைகள் தொடங்கப்படுவது, IoT, பிளாக்செயின்,
செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், தரவுப் பகுப்பாய்வு போன்ற புதிய தொழில்நுட்பங்கள் மீது பணியாற்றி வருகின்ற இம்மாநிலத்தின் ஸ்டார்ட்அப்
நிறுவனங்கள் மீது பெரிய உத்வேகத்தையும், உந்துதலையும் நிச்சயம் தரும்.”

இந்நிகழ்ச்சியின்போது பேசிய ஜியோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்,
“தமிழ்நாட்டில் இன்னும் 6 நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை விரிவாக்கம்
செய்வதில் நாங்கள் அளவற்ற உற்சாகம் கொண்டிருக்கிறோம். மிக விரைவிலேயே
ஜியோ ட்ரூ 5ஜி – ன் வலையமைப்பு தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் செயல்படும்.
2023 டிசம்பர் மாதத்திற்குள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமமும், நகரமும் ஜியோ ட்ரூ
5ஜி சேவைகளைப் பெற்று பயன்படுத்துகின்ற நிலையில் இருக்கும்.
ஜியோ ட்ரூ 5ஜி சேவைகள் தொடங்கப்படுவதன் மூலம் மிகச்சிறந்த தொலைத்தொடர்பு
வலையமைப்பை மட்டும் தமிழ்நாடு பெறுவதில்லை. மின் – ஆளுகை, கல்வி, சுகாதார
பராமரிப்பு, தகவல் தொழில்நுட்பம், சிறு நடுத்தர நிறுவனங்களது பிசினஸ் ஆகிய
பிரிவுகளிலும், புதிய வளர்ச்சிக்கான வாய்ப்புகளை இது திறந்துவிடும். நிகழ்நேர
அடிப்படையில் அரசும், அதன் குடிமக்களும் தொடர்ந்து இணைப்பில் இருப்பதை ஜியோ
ட்ரூ 5ஜி ஏதுவாக்கும்; அரசின் சிறப்பான திட்டங்கள் அனைத்தும் இறுதியில்
அத்திட்டத்தின் பலனைப் பெறும் பயனாளிகளை விரைவாக சென்றடைவதற்கு பெரிதும்
உதவும்.
தமிழ்நாட்டில் 5ஜி வலையமைப்பை நிறுவுவதற்காக ரூ.40,000 கோடிக்கும் அதிகமான
தொகையை ஜியோ முதலீடு செய்திருக்கிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும்
தமிழ்நாட்டில் ஏறக்குறைய 1 இலட்சம் நபர்களுக்கு இதன்மூலம் வேலைவாய்ப்பை
வழங்கியிருக்கிறது. இம்மாநிலத்தின் மீது ரிலையன்ஸ் ஜியோ கொண்டிருக்கும்
பொறுப்புறுதியையும், பிணைப்பையும் இது நேர்த்தியாக வெளிப்படுத்துகிறது.
இந்த தொழில்நுட்பத்தின் அற்புதமான ஆற்றலும் மற்றும் அதன் மிகப்பிரமாதமான
ஆதாயப் பலன்களும் ஒவ்வொரு நபருக்கும் இதனால் கிடைக்கும் என்பதால்,
தமிழ்நாட்டில் அனைத்து நபர்களுக்கும் ட்ரூ 5ஜி சேவை கிடைக்கப்பெறுவதை
உறுதிசெய்ய ஜியோ பொறியியலாளர்கள் ஓய்வின்றி, தொடர்ந்து பணியாற்றி
வருகின்றனர். தமிழ்நாட்டை டிஜிட்டல்மய பொருளாதாரமாக ஆக்குவதற்கும் மற்றும்
இம்மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் இன்னும் வேகமாக எடுத்துச் செல்வதற்கும்
தங்களது மேலான ஆதரவை வழங்கி வருவதற்காக தமிழ்நாடு அரசுக்கும் மற்றும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் எமது
மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று கூறினார்.
இன்றுமுதல் மேற்குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் ஜியோ பயனாளிகள் கூடுதல்
கட்டணமின்றி 1 Gbps+ வேகம் வரை வரம்பற்ற தரவினை அனுபவிப்பதற்கு ஜியோ
வெல்கம் ஆஃபரை பயன்படுத்த அழைக்கப்படுவார்கள்.
மூன்று மடங்கு ஆதாயதை ஜியோ ட்ரூ 5ஜி கொண்டிருப்பதால், இந்தியாவில் ஒரே ட்ரூ 5
ஜி வலையமைப்பாக இதனை ஆக்கியிருக்கிறது:

1. 4ஜி வலையமைப்பு மீது பூஜ்ய சார்ந்திருப்பு நிலை என்பதோடு, மிக நவீன 5ஜி
வலையமைப்பைக் கொண்டு தனித்து நிற்கும் 5ஜி கட்டமைப்பு
2. 700 MHz, 3500 MHz, மற்றும் 26 GHz பேண்டுகளில் 5ஜி ஸ்பெக்ட்ரம் – ன்
மிகப்பெரிய மற்றும் சிறந்த கலவை
3. கேரியர் அக்ரீகேஷன் என அழைக்கப்படும் ஒரு நவீன தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்தி இந்த 5ஜி ஃப்ரீக்வென்சிகளை ஒற்றை வலுவுள்ள டேட்டா ஐவே ஆக
நேர்த்தியாக ஒருங்கிணைக்கும் கேரியர் அக்ரிகேஷன்.

 

Share this:

Exit mobile version