அவர் முன்பு போல் இல்லை, கணவர் பற்றி மனம் திறக்கும் பிரபல நடிகை

திருமணமாகி சரியாக ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள‌ நிலையில், தனது கணவரும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யா தன்னிடம் முன்பு போல நடந்து கொள்வதில்லை என்று கூறியுள்ளார் சமந்தா.

சமந்தாவும் நாக சைதன்யாவும் திருமணத்திற்கு பின் இணைந்து நடித்துள்ள முதல் படமான‌ மஜிலி வெளியாகியுள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ள சமந்தா, ‘திருமணத்துக்கு முந்தைய அன்புக்கும், பிந்தைய அன்புக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது,’ என்றார்.

மேலும் அவர், ‘ஒரு பெண்ணுக்கும், அவள் கணவருக்கும், கணவரின் குடும்பத்திற்கும் இடையே இருக்கும் அழகிய உறவைக் காட்டும் படம் மஜிலி,’ என்றார். மீண்டும் இணைந்து நடிப்பீர்களா எனக் கேட்டதற்கு, ‘நாங்கள் சேர்ந்து நடித்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும். அந்த எதிர்பார்ப்பை எங்களால் பூர்த்தி செய்ய முடியாது.

நானும் சைதன்யாவும் மரத்தைச் சுற்றிப் பாடிக்கொண்டிருந்தால் யாரும் பார்க்க மாட்டார்கள். நாங்கள் இன்னொரு படம் சேர்ந்து நடிக்க வேண்டுமென்றால், அது வித்தியாசமாக இருக்க வேண்டும்,’ என்றார்.

சமீபத்தில் சமந்தா மீடியாவிடம் பேசிய போது, சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து கணவரிடம் சொன்னபோது என்னை அதிர்ச்சியாக பார்த்தார் என்றார்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் கிட்டதட்ட எல்லோருக்குமே சர்ச்சையான கதாபாத்திரம் தான் என்றாலும், சமந்தா ஏற்றுள்ள வேம்பு என்னும் வேடமும், அவர் பேசியுள்ள டயலாக்குகளும் அதிர்ச்சியை கிளப்பியது.

அதுவும், சமந்தா தெலுங்கு தேசத்தில் மிகவும் மரியாதைக்குரிய அக்கினேனி குடும்பத்து மருமகள் என்பதால், அந்த குடும்பத்தின் அபிமானிகள் ஷாக்கானார்கள். ‘நம்ம வீட்டு பொண்ணு எப்படி இப்படி நடிக்கலாம்’ என்று அவர்கள் கேட்கிறார்களாம்.