“Gourmet Garden during Chennai Floods”

As Chennai floods and Vendors refuse to deliver food in the city, Gourmet Garden has partnered with Ocean Delight Surfschool to make Deliveries in many areas around the city.

Gourmet Garden in partnership with Ocean Delight Surfschool has been providing surfboards to our delivery agents and surfing through the Streets to deliver your orders to your doorstep!

Says Vishal Narayanaswamy, Co-founder, Gourmet Garden, “I have been personally going into areas where the entire ground floor is flooded and people are stuck on upper floors without any food. I urge every grocery service in the city to come out and help in this time of need. We are doing out best with our delivery partners and do hope, nobody has to go without food in these times of crisis.”

Even in the next few days as the stormy weather continues, Gourmet Garden is open for business and accepting your orders. Please share this with your near and dear ones in Chennai who haven’t been able to order fresh food essentials.

*ஓசன் டிலைட் சர்ப்ஸ்கூலுடன் கைகோர்த்து நகரில் உணவு பிரச்சனையை எளிதாக்கும் கார்மெட் கார்டன்*

சென்னையில் மழை வெள்ளம் காரணமாக உணவுப்பொருட்களை டெலிவரி செய்யும் நபர்கள் பலரும் மறுத்து வருகின்றனர் இந்த நிலையில் நகரை சுற்றியுள்ள பல பகுதிகளில் இதுபோன்ற விநியோகத்தை எளிதாக்கும் விதமாக கார்மெட் கார்டன் (Gourmet Garden) நிறுவனம் ஓசன் டிலைட் சர்ப்ஸ்கூலுடன் (Ocean Delight Surf school) கைகோர்த்து களம் இறங்கியுள்ளது

இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து உணவுப்பொருட்களை விநியோகம் செய்யும் தங்களது விநியோக முகவர்களுக்கு சர்ஃபிங் படகுகளை வழங்கி தண்ணீர் தேங்கியிருக்கும் தெருக்களில் கூட வாடிக்கையாளர்களின்  வீட்டு வாசலுக்கே சென்று வினியோகம் செய்யும் வகையில் வசதி செய்து கொடுக்கின்றன.

கார்மெட் கார்டன் இணை ஸ்தாபகர் விஷால் நாராயணசாமி கூறுகையில், “நான் இதுபோன்ற பல பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டபோது தரைத்தளத்தில் தண்ணீர் சூழ்ந்த நிலையில் பலரும் மேல் தளங்களில் சென்று தங்கியுள்ளதுடன் சாப்பாடு வசதியின்றி இருப்பதையும் காண முடிந்தது. இந்த நகரில் உள்ள உணவுப் பொருட்கள் வினியோகம் செய்பவர்கள் அனைவரும் இதுபோன்ற சமயத்தில் துணிந்து வெளியே வந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் எங்களது விநியோக முகவர்களுடன் இணைந்து இந்த சமயத்தில் எங்களால் இயன்ற வரை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம்.
மேலும் இந்த இக்கட்டான சூழலில் எவர் ஒருவுக்கேனும் கூட உணவு கிடைக்காமல் போய் விடக்கூடாது என்றும் உறுதியாக நம்புகிறோம்.

இதேபோன்ற மழை வெள்ள சூழல் அடுத்த சில நாட்கள் வரை தொடர்ந்தாலும் கூட கார்மெட் கார்டன் எப்போதும் திறந்திருக்கும் என்பதுடன் உங்கள் ஆர்டர்களையும் ஏற்றுக்கொள்ளும். சென்னையில் உங்கள் அருகாமையில் தேவையான பிரஷ்ஷான உணவுப் பொருட்கள் பெற இயலாத நிலையில் இருக்கும்  நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்த தகவலை தயவுசெய்து பகிருங்கள்”. 

Share this:

Exit mobile version