*கலை இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு ஞானராஜசேகரன் அஞ்சலி!*

*எங்களைத்  தேசிய அளவில் திரும்பிப் பார்க்க வைத்தவர்*:
*கலை இயக்குநர்   பி.கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு ஞானராஜசேகரன் அஞ்சலி!*
ஐந்து முறை தேசிய விருதுகள் வாங்கிய கலை இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி மறைவு குறித்து  இயக்குநர் ஞான ராஜசேகரன் தனது அஞ்சலியில் கூறியிருப்பதாவது:
‘அமரர்   P. கிருஷ்ணமூர்த்தி.  அற்புதமான மனிதர்.   படைப்புக்கலைஞர். என் திரைப்பட முயற்சிகளுக்கு  பக்கபலமாக இருந்தவர். திரைப்படத்தில் யதார்த்த கலைப் பின்னணியை செலவே இல்லாமல் உருவாக்கித்தந்து எங்களைப் போன்றோரின் திரைப்படங்களை தேசிய அளவில் திரும்பிப் பார்க்க வைத்தவர்.’ பாரதி’ திரைப்படத்துக்காக  கலை இயக்கம், உடை வடிவமைப்பு  இரண்டிற்கும் தேசிய விருது வாங்கித் தந்தவர். ‘மோகமுள்’, ‘பாரதி’, ‘ராமானுஜன்’  என்று மூன்று படங்களிலும் படைப்பாளியாக எங்களோடு சேர்ந்து இயங்கியவர். தொழில் தர்மம், மனித நேயம், நேர்மை, படைப்புத்திறன், அழகுணர்ச்சி எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர். மலையாளத்திலும் ‘வைசாலி’, ‘வடக்கண் வீரகதா’ முதலான படங்களில் சாதனைகள் புரிந்தவர்.என் சார்பிலும் என் மனைவி சார்பிலும் எங்கள் ஆழ்ந்த இரங்கலும் அஞ்சலிகளும்.’ இவ்வாறு  ஞான ராஜசேகரன் கூறியுள்ளார்.