‘ஜியோபோன் நெக்ஸ்ட்’ அறிமுகம் பற்றிய தகவல்களைப் பகிரும் ரிலையன்ஸ் ஜியோ

  • ஒவ்வொரு இந்தியருக்கும் இணைப்புத்திறனை வழங்கும் தனது தொலைநோக்கு
    குறிக்கோளை இதன்மூலம் மறுஉறுதி செய்கிறது ஜியோ
  • ஜியோபோன் நெக்ஸ்ட் – ஐ உருவாக்க, தனது பார்ட்னர்கள் கூகுள் மற்றும் குவால்காம்
    நிறுவனங்களுடன் இணைந்து இந்த குறிக்கோளையும், கூட்டு முயற்சிகளையும் ஜியோ மேற்கொள்கிறது.

தீபாவளி திருநாள் கொண்டாட்ட நிகழ்விற்கு முன்னதாக
‘மேக்கிங் ஆஃப் ஜியோபோன் நெக்ஸ்ட்’ என்ற வீடியோவை ஜியோ வெளியிட்டிருக்கிறது. சமீப காலத்தில் மிக ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட மொபைல் போன்களில் ஒன்றான ஜியோபோன் நெக்ஸ்ட், என்பதனை அறிமுகம் செய்வதன் பின்புலத்திலுள்ள யோசனை, குறிக்கோள் மற்றும் செயல்திட்டம் குறித்த ஒரு நேர்த்தியான கண்ணோட்டத்தை இந்த சிறு வீடியோ வழங்குகிறது. இந்திய தேசத்தை மையக்கருவாக கொண்டு இப்புதிய போன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த போன் மீது உலகளவிலான கவனம் கிடைக்கப்பெறுவது ஏற்கனவே தொடங்கிவிட்டது.

5 ஆண்டுகள் என்ற குறுகியகால அளவிலேயே இந்தியாவில் ஒவ்வொரு குடும்பத்திலும் நன்கு அறிந்த பெயராகவும், பிராண்டாகவும் ஜியோ உருவெடுத்திருக்கிறது. 430 மில்லியன் பயனாளிகளைக் கொண்டிருக்கும் ஜியோவின் சேவைகள் நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகள் மற்றும் அனைத்து பொருளாதார மற்றும் சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என அனைத்தையும் சென்றடைந்திருக்கின்றன. ஜியோபோன் நெக்ஸ்ட் என்பதன் அறிமுகத்தின் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் இணைப்புத்திறனை ஜனநாயகமாக்கி, அனைவருக்கும் பயனளிக்குமாறு செய்ய வேண்டும் என்ற தனது தொலைநோக்கு குறிக்கோளை நோக்கி ஒரு உறுதியான முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொள்ள ஜியோ திட்டமிட்டிருக்கிறது.

ஜியோபோன் நெக்ஸ்ட், இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இந்தியாவிற்காக தயாரிக்கப்படுகிறது மற்றும் இந்தியர்களால் தயாரிக்கப்படுகிறது என்ற பெருமையைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இந்தியருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான சமஅளவிலான வாய்ப்பும், சமஅளவிலான அணுகுவசதியும் கிடைப்பதை ஜியோஃபோன் நெக்ஸ்ட் உறுதி செய்யும். கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையை ஜியோபோன் நெக்ஸ்ட் எப்படி மாற்றியமைக்கப் போகிறது என்பது பற்றி இந்த வீடியோ படம் நேர்த்தியாகப் பேசுகிறது.

ஆண்ட்ராய்டு மூலம் ஆற்றல் பெறும் பிரகதி OS, என்பது இந்தியாவிற்காகவே குறிப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்ற உலகத்தரத்திலான ஒரு ஆபரேட்டிங் சிஸ்டமாகும். ஜியோபோன் நெக்ஸ்ட் – ன் இதயமாக இருப்பது இதுதான். அனைவருக்கும் முன்னேற்றத்தை (பிரகதி) கொண்டு வரும் குறிக்கோளோடு, ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்களின் மிகச்சிறந்த சிந்தனையாளர்கள் மற்றும் உருவாக்குனர்களால் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.கட்டுபடியாகக்கூடிய எளிய கட்டணத்தில் சிரமமற்ற உண்மையிலேயே நேர்த்தியான அனுபவத்தை இது வழங்குகிறது.

ஜியோபோன் நெக்ஸ்ட் – ன் புராசஸர், உலகளவில் தொழில்நுட்ப துறையில் முதன்மை வகிக்கும் மற்றொரு நிறுவனமான குவால்காமிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது. ஜியோஃபோன் நெக்ஸ்டில் இடம்பெற்றிருக்கும் குவால்காம் புராசஸர், சிறப்பான இணைப்புத்திறனையும் மற்றும் அமைவிடத்தைக் கண்டறியும் தொழில்நுட்பங்களை வழங்குவது மீதும் சிறப்பு கவனம் செலுத்துகிறது. மொபைல் சாதனத்தின் செயல்திறன், ஆடியோ மற்றும் பேட்டரியை உயர்திறனுள்ளவையாக ஆக்குவதும் இந்த புராசஸரின் செயல்பாடாக இருக்கிறது.

ஜியோபோன் நெக்ஸ்ட் – ன் சிறப்பான அம்சங்களது தொகுப்பு முற்றிலும் புதியதொரு
வழிமுறையில் தொழில்நுட்பத்துடனான இடைவினை செயல்பாட்டை உகந்தவாறு
ஏதுவாக்கும். ஜியோபோன் நெக்ஸ்ட் – ன் தனித்துவமான சில அம்சங்கள்:
வாய்ஸ் அசிஸ்டன்ட் மொபைல் சாதனத்தை இயக்குவதற்கு (செயலியை திறப்பது, செட்டிங்ஸ்களின் மேலாண்மை போன்றவை) பயனாளிகளுக்கு வாய்ஸ் அசிஸ்டன்ட் உதவுகிறது. அத்துடன், அவர்களுக்கு நன்கு பரிச்சயமான ஒரு மொழியில் இன்டர்நெட்டிலிருந்து மிக எளிதாக தகவல் / உள்ளடக்க நிகழ்ச்சிகளைப் பெறுவதற்கு உதவுகிறது. ரீட் அலவ்ட் (சத்தமாக வாசிப்பது) ‘லிசன்’ (செவிமடுத்தல்) என்ற இயக்க அம்சம், எந்தவொரு திரையிலும் பார்க்கின்ற உள்ளடக்க வாசகங்களை மொபைல் சாதனத்தால் சத்தமாக வாசிக்கப்பட்டு பயனாளிகள் கேட்பதை அனுமதிக்கிறது. அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு மொழியில் கேட்பதன் வழியாக உள்ளடக்கத்தை பார்க்கவும், கேட்கவும் இது பயனாளிகளுக்கு வகை செய்கிறது. மொழிபெயர்ப்பு (டிரான்ஸ்லேட்) ‘டிரான்ஸ்லேட்’ என்ற இயக்க அம்சம், பயனாளிகள் விரும்பி தேர்வு செய்கின்ற மொழியில் எந்தவொரு திரை தகவலையும், செய்தியையும் மொழிபெயர்க்க பயனாளிக்கு உதவுகிறது. தாங்கள் விரும்புகின்ற மொழியில் எந்தவொரு தகவலையும் பயனாளிகள் வாசிக்க இதனால் இயலும். பயன்படுத்த எளிதான மற்றும் ஸ்மார்ட் கேமரா இந்த மொபைலில் இடம்பெற்றிருக்கும் ஒரு ஸ்மார்ட்டான, சக்தி வாய்ந்த கேமரா, பல்வேறு நிழற்பட வழிமுறைகளுக்கு ஆதரவளிக்கிறது. தானியக்க முறையில் பின்புல காட்சியை தெளிவற்றதாக்கி, மிகச்சிறப்பான நிழற்படங்களை பதிவுசெய்ய அனுமதிக்கின்ற போர்ட்ரெய்ட்
வழிமுறை இதில் இருக்கிறது.

இதன் நைட் மோட் குறைவான வெளிச்சத்தின் கீழும் சிறப்பான போட்டோக்களை எடுக்க அனுமதிக்கிறது. உணர்வுகள் மற்றும் கொண்டாட்ட நிகழ்வுகளோடு தொடர்புபடுத்துவதன் வழியாக எடுத்த படங்களை இன்னும் மேம்படுத்துவதற்கு பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்திய மேம்படுத்தப்பட்ட ரியாலிட்டி ஃபில்டர்கள் ஏற்கனவே இணைக்கப்பட்டதாக இதன் கேமரா செயலி வெளிவருகிறது. முன்பே நிறுவப்பட்டிருக்கும் ஜியோ மற்றும் கூகுள் செயலிகள் பிளேஸ்டோரில் கிடைக்கக்கூடிய இலட்சக்கணக்கான செயலியிலிருந்து விரும்பியதை தேர்வு
செய்கின்ற சுதந்திரத்தை இச்சானத்தில் அனுபவிக்க இயலும். கூகுள் பிளே ஸ்டோர் வழியாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்த கிடைக்கக்கூடிய அனைத்து ஆண்ட்ராய்டு செயலிகளுக்கும் இந்த மொபைல் இணக்கமான ஆதரவை வழங்குகிறது. எண்ணற்ற ஜியோ மற்றும் கூகுள் செயலிகள் இந்த மொபைலில் ப்ரீலோடு செய்யப்பட்டிருப்பது இதன் சிறப்பை இன்னும் உயர்த்துகிறது. தானியக்க முறையில் மென்பொருள் தரம்உயர்த்தல்

தானியக்க மென்பொருள் அப்டேட்கள் மூலம் ஜியோபோன்கள் எப்போதும்
நிகழ்நிலைப்படுத்தப்பட்டதாக இருக்கும். மிக சமீபத்திய அம்சங்கள் தானியக்க முறையில் வழங்கப்படுவதன் மூலம் இந்த அனுபவம் இனிவரும் காலங்களில் இன்னும் மிகச்சிறப்பானதாக இருக்கப்போகிறது. சிரமமற்ற இனிய அனுபவத்தை உறுதிசெய்வதற்கான பாதுகாப்பு அப்டேட்ஸ்களுடன் ஜியோபோன் நெக்ஸ்ட் மொபைல் வெளிவருகிறது. வியப்பூட்டும் பேட்டரி ஆயுள் ஆண்ட்ராய்டு மூலம் ஆற்றல் பெறுகின்ற, புதிதாக வடிவமைக்கப்பட்ட பிரகதி OS, நீண்ட பேட்டரி ஆயுளை உறுதிசெய்வதோடு, சிறப்பான செயல்திறனையும் ஏதுவாக்குகிறது.

JIO UNVEILS THE ‘MAKING OF JIOPHONE NEXT’

  • Jio reaffirms its vision to provide digital connectivity to each and every Indian
  •  Shares vision & joint efforts with partners Google and Qualcomm to create JioPhone Next

Ahead of Diwali, Jio has released the ‘Making of JioPhone Next’ film. The short video provides an
insight into vision & idea behind launching of one of the most awaited phones in recent times –
JioPhone Next. The new phone is designed with India at its heart and has already started receiving
global attention.
In a short span of 5 years, Jio has become a household name in India. With 430 million users, its
services span geographies, economic and social classes. With JioPhone Next, Jio plans to take a
decisive step towards its vision of democratising digital connectivity in India.
JioPhone Next is Made in India, Made for India and Made by Indians. JioPhone Next will ensure that
every Indian gets an equal opportunity and equal access to digital technology. The video talks about
how JioPhone Next is set to change lives of millions of Indians.
Pragati OS, powered by Android, is a world class operating system that has been built specifically for
India and is at the heart of JioPhone Next. It has been engineered by best minds at Jio and Google
with an objective to bring Pragati (progress) for all, while offering truly seamless experience at
affordable cost.
JioPhone Next’s processor comes from another technology leader, Qualcomm. The Qualcomm
processor on the JioPhone Next focuses on delivering optimized connectivity and location
technologies along with optimizations in device performance, audio and battery.
The rich feature set of JioPhone Next will enable interaction with technology in a whole new manner.
Some differentiated features of JioPhone Next:
Voice Assistant
Voice assistant helps users to operate the device (Open App, manage settings etc.) and get
information/content from Internet easily in a language familiar to them.
Read Aloud
‘Listen’ functionality allows user to have content on any screen read out to them by device. This
allows users to consume content by listening in a language which they can understand.
Translate
‘Translate’ functionality allows user to have any screen translated to language of user choice. This
allows users to read any content in their language of preference.
Easy and Smart Camera
The device is equipped with a smart and powerful camera which supports various photography modes
such as Portrait mode allowing users to capture great photos with automatically blurred background.
Night mode allows users to capture great photos even under low light.
The camera app also comes preloaded with custom Indian augmented reality filters to enhance the
pictures by associating with emotions and festivities.
Jio and Google Apps preloaded
The device supports all the available android apps which users can download and use in device via
Google Play Store thus giving them the freedom to choose from lacs of apps available on the Play
store. It also comes preloaded with a host of Jio and Google apps.
Automatic Software upgrade
The JioPhone Next remains up to date with automatic software updates. The experience is only going
to get better over time with the latest features delivered automatically. It also comes with security
updates ensuring a hassle-free experience.
Amazing Battery Life
The newly designed Pragati OS, which is powered by Android, ensures optimum performance while
ensuring long battery life.