Finder First Look Release

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும்  நடிகர், இயக்குநர் எஸ் ஜே சூர்யா ஆகியோர் வெளியிட்ட  “ஃபைண்டர்” படத்தின்  ஃபர்ஸ்ட்  லுக் !!

நடிகர் சார்லி நடிப்பில், “ஃபைண்டர்” படத்தின்  பரபரப்பான ஃபர்ஸ்ட்  லுக் வெளியானது !!

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் பரபரப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது !!

Arabi production  சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம்  தயாரிக்க,   நடிகர் சார்லி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் பரபரப்பான திரில்லர திரைப்படமான  “ஃபைண்டர்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது.

தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகர், இயக்குநர் எஸ் ஜே சூர்யா ஆகியோர் சமூக வலைதளம் வழியே “ஃபைண்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

சிறைபின்னணியில் சார்லி நிற்க, ஒரு திரில்லர் திரைப்படத்திற்கான அத்தனை அம்சங்களும், நிறைந்ததாக அட்டகாசமாக உள்ளது ஃபர்ஸ்ட் லுக்.

அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்கு பெற்றுத்தரும் நிறுவனத்தை பற்றிய உண்மை கதையின் அடிப்படையில், சென்னை பின்னணியில்  இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இருக்கை நுனியில் ரசிகர்களை இருத்தி வைக்கும் பரபரப்பான திரில்லராக உருவாகும் இப்படத்தை, இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்குவதோடு,  இப்படத்தில் முக்கியமான வேடத்திலும் நடித்துள்ளார்.  நடிகர் சார்லி கதையின் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார்.  இவர்களுடன் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர் நடிகை பிரானா ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள  பகுதிகளில்  இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு  குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு நிறுவனம் – Arabi production  & Viyan ventures,தயாரிப்பாளர்கள் – ரஜீஃப்  சுப்பிரமணியம் &  வினோத் ராஜேந்திரன்,இயக்கம் – வினோத் ராஜேந்திரன்,ஒளிப்பதிவு – பிரசாந்த் வெள்ளிங்கிரி,எடிட்டர் – தமிழ்குமரன்,கலை இயக்கம் – அஜய் சம்பந்தம்,இசை – சூர்ய பிரசாத்,மக்கள் தொடர்பு – சுல்தான் ராஜா

Share this:

Exit mobile version