ஜெயா டிவியில் புதிய சுற்றுகளுடன் பரதநாட்டிய கலைஞர்களுக்காக ஒளிபரப்பாகும் பிரத்யேக நிகழ்ச்சி “தக திமி தக ஜனு”

தக திமி தக ஜனு”

 ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9.30 மணிக்கு  ஒளிபரப்பாகிறது .

ஜெயா டிவியின் ‘தக திமி தா ‘ பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்திற்கு சேனலின் சார்பாக வழங்கும் மிகப்பெரிய பங்களிப்பாகும்.ஜெயா டிவி இளம் பரதநாட்டிய கலைஞர்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கியுள்ளது மற்றும் ‘தக திமி தா’ என்பது ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியாகும், இது 500-க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டது மேலும் தேசிய அளவில்  சிறந்த நடன நிகழ்ச்சிக்கு வழங்கப்படும் ‘ராபா’ விருதையும் வென்றுள்ளது.

இது 5000-க்கும் மேற்பட்ட இளம் திறமைகளை அடையாளம் காட்டியுள்ளது  கிட்டத்தட்ட 1000 நடன குருக்களையும் உருவாக்கிய வரலாறு இந்த நிகழ்ச்சிக்கு உண்டு.

சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக விளங்கிய  தக திமி தாவை முன்னணி நடிகைகள்,  நடனக் கலைஞர்களாக திகழ்ந்த பானுப்ரியா, ஷோபனா, சுகன்யா, மோகினி, சுதா சந்திரன், அன்னி மாளவிகா, விமலா ராமன், இந்திரஜா, அபர்ணா மற்றும் பலர் தொகுத்து வழங்கியுள்ளனர்.

தற்போது  ஜெயா டிவி புதிய வடிவத்தில் மற்றும்  புதிய சுற்றுகளுடன் பரதநாட்டிய கலைஞர்களுக்கான பிரத்யேக   நிகழ்ச்சியாக “தக திமி தக ஜனு” உடன் வருகிறது. இந்த புதிய நிகழ்ச்சி சீசன்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சீசனும் ஆரம்பச் சுற்று, காலிறுதிச் சுற்று, அரையிறுதிச் சுற்று மற்றும் இறுதிச் சுற்று என மொத்தம் 26 எபிசோடுகளைக் கொண்டுள்ளது. சீசனின் முடிவில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு நிலையிலும்  வெவ்வேறு விதமான சுற்றுகள் இருக்கும்.ஆரம்ப சுற்று 14  எபிசோடுகளாக  படமாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 42 போட்டியாளர்கள்  ஆடிசன்  செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுவார்கள், அவர்கள் அனைவரும் இந்த ஆரம்ப சுற்றில் பங்கேற்பார்கள். 

அவர்களிலிருந்து 14 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் மேலும்  4 வைல்டு கார்டு என்ட்ரிகளுக்கும் இடம் உண்டு. போட்டியாளர்கள் 3  சவாலான  சுற்றில் போட்டியிட வேண்டும்.

1.தில்லானா சுற்று:-

 இந்த முதல் சுற்று ஒரு சவாலானது மற்றும் நடனக் கலைஞரின் திறமை, திறன், தரம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை சோதிக்ககூடியதாக இருக்கும். தில்லானா என்பது  சிக்கலான தாளங்களுடன் குறுக்கிடப்பட்ட வேகமான எண்.

  1. இரண்டாவது சுற்று திரை இசை சுற்று:-

இந்த சுற்று நடனக் கலைஞர்களின் அபிநயம்  அல்லது பாவனைகளை  வெளிப்படுத்தும்  திறனை மதிப்பீடு செய்யும். போட்டியாளர்கள் திரைப்படங்களிலிருந்து   மெலோடி  பாடல்களை தேர்வு செய்து நடனமாட வேண்டும். ஏற்கனவே அந்த படங்களில் நடனமாடிய  பாடல்களை தேர்வு செய்யக்கூடாது. நடனமாடாத  பாடல்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

  1. இறுதி சுற்று ஒரு சஸ்பென்ஸ் சுற்று இதற்கு சங்கமம்  என்று பெயர்.

ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு கிண்ணத்திலிருந்து ஒரு சீட்டை எடுக்க வேண்டும், அதில் என்ன ஏ  எழுதப்பட்டிற்கோ அதற்கு  போட்டியாளர்கள் நடனமாட வேண்டும்.

இது நாட்டுப்புறம் சார்ந்த அல்லது இசைக்கருவிகளின் அடிப்படையில்  இருக்கலாம். ஆரம்ப  சுற்றுகளான 14 எபிசோடுகளிலும், ஒவ்வொரு எபிசோடுக்கும் 2 நடுவர்கள் இருப்பர். அவர்கள் அனைவரும் கலைமாமணி, நாட்டியத்தில் முனைவர் பட்டம் பெற்ற மிகவும் பிரபலமான  நடன குருக்களாவர்.

இது புதுமையான நிகழ்ச்சியை நடிகையும், நடன கலைஞருமான அதிதி பாலன் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியின் கருத்து மற்றும் இயக்கம்:‘கலைமாமணி’ டாக்டர் ராதிகா ஷுராஜித். ஸ்கிரிப்ட் , ஒருங்கிணைப்பு மற்றும் உதவி இயக்கம்: ஸ்ரீ. சர்ச்சில் பாண்டியன்.

‘THAKA DHIMI THAKA JANU’

THAKA DHIMI THA’ of Jaya TV is the greatest contribution of the channel to the classical Dance of Bharatanatyam.

Jaya TV had created this space to promote young Bharatanatyam dancers and ‘THAKA DHIMI THA’ was a show of a different kind which had more than 500 episodes telecast and it also won the National RAPA Award( Best dance show on Television)

It brought together more than 5000 young talents, nearly 1000 dance gurus including the legends, and it was a super hit show which was then anchored by the leading Actor-Dancers. – BHANUPRIYA, SHOBANA, SUKANYA, MOHINI, SUDHA CHANDRAN , ANNI MAALAVIKA, VIMALA RAMAN, INDRAJA, APARNA and many others.

And now Jaya TV is coming out with a new Bharatanatyam game show  ‘THAKA DHIMI THAKA JANU ‘ with newer concepts and newer rounds. This new show is planned as seasons.

Every season of 26 episodes will have preliminary round, quarter finals, semi finals and the finals and the season 1 winner will be selected

Each level will have different rounds to compete in

The preliminary round has been shot as 14 episodes. A total of 42 participants were auditioned and selected and they were a part of this first preliminary round. We will have 14 winners. We will also have 4 wild card entries. The contestants will have to compete in 3 challenging round. 

  1. TILLANA ROUND

This first round is a challenging one and will test the dancer’s skill, ability, standard and stamina. The Tillana is a fast number interspersed with intricate complex rhythms.

  1. The second round is FILM SONG – Tirai Isai sutru

This round will evaluate the Abhinaya or expressions skill of dancers. The contestants will have to perform to an ever green melody from the films. They are not allowed to select songs that are danced to in films. Non dance songs will have to be chosen

  1. The final round is the suspense round called SANGAMAM

Every contestant will have to pick a chit from a bowl and whatever they get; they have to dance to that.

It could be folk, instrumental or even a property.

The preliminary 14 episodes had 2 judges per episode. They are all established Gurus and performers of repute – all Kalaimamani awardees and Doctorates in Natyam.

This unique show is hosted by Actor- Dancer ‘Aruvi’ fame Aditi Balan.

The concept and Direction is by ‘Kalaimamani’ Dr. Radhika Shurajit

Script, Co ordination and Assistant Direction : Sri. Churchill Pandian

‘THAKA DHIMI THAKA JANU will be telecast every Sunday 9.