கட்டு கட்டாய் பணம்: ஹவாலா ரூட் எடுத்த திமுக?

துரைமுருகனுக்கு தொடர்புடைய இடங்களில் கோடி கோடியாய் பணம் கொட்டிக் கிடந்ததை கண்டு வருமான வரித் துறை அதிகாரிகளுக்கே அதிர்ச்சியாம். இவ்வளவு கெடுபடிகளுக்கு இடையிலும் எப்படி இவ்வளவு பணத்தை ஒரே இடத்தில், அதுவும் ‘தேர்தல் செலவுக்காக’ தெளிவாக பெயர் எழுதி பன்டல் கட்டி வைக்க முடிந்தது என்று கேள்விக்கு மேல் கேள்விகளாம்.

ஒரு வேளை இந்த பணம் ஹவாலா மூலம் கொண்டு வரப்பட்டருக்குமோ என்று கூட விசாராணை நடக்கிறதாம். தில்லியில் இருந்து வந்திருந்த‌ ஸ்பெஷல் டீம்கள் கேள்விகளால் சம்பந்தப்பட்டவர்களை துளைத்து வருகிறார்களாம்.

வரும் நாட்களில் அதிர்ச்சி தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரும் என்று விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரெய்டுகளை பற்றி துரைமுருகன் பேசும் போது கழிசடை அரசியல் வாதிகள் என் மகன் (திமுகவின் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த்) வெற்றி பெற்றுவிடுவான் என எண்ணி வருமானவரித்துறையை ஏவியுள்ளார்கள். இந்த சலசலப்புக்கெல்லாம் பனங்காட்டு நரியான திமுக அஞ்சாது என்றார்.

இதற்கு பதிலளித்த அதிமுக கூட்டணியின் வேட்பாளர் ஏ சி சண்முகம், எனக்கும் இந்த ரெய்டுக்கும் எந்த சம்மந்தமுமில்லை. என்னை சீண்டினால் அவர் ஒரு மாதத்துக்கு தூங்க முடியாது. அவருடைய சொத்துக்கள் எங்கங்கு உள்ளது என்பது எனக்கு முழுதும் தெரியும் என்றார்.

இதை அடுத்து, திமுக பிரமுகர்கள் துரைமுருகனிடம், நம்மாளுங்க யாரோ சரியா சண்முகத்திடம் உங்களைப்பற்றி கூறியுள்ளார்கள் என சிலரின் பெயர்களை சொல்லியுள்ளார்கள். அதனால, கட்சிக்குள்ளேயும் விசாரணை நடக்குதாம்.

ரெய்டு நடத்தப்படும் தகவல் முன்கூட்டியே கிடைக்கப்பெற்று துரைமுருகனுக்குச் சொந்தமான கிங்க்ஸ்டன் காலேஜியில் இருந்து வேலூரில் உள்ள ஒரு சிமெண்ட் குடோனுக்கு ஏதோ கடத்தப்பட்டதாம். இந்தத் தகவல் தெரியவந்ததும், அங்கேயும் தேர்தல் அதிரடிப் படையும், வருமான வரித்துறையும் லோக்கல் போலீஸுடன் ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டில்தான் அட்டைப்பெட்டி மற்றும் சாக்குகளில் கட்டிவைக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் சிக்கியுள்ளது.

வேலூர் தொகுதிக்குட்பட்ட வார்டுகள் பணமிருந்த அட்டை பெட்டிகள் மீது எழுதப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது. தேர்தல் பிரசாரத்துக்கு செல்லவிடாமல் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்துவதாக கூறி துரைமுருகனும் கதிர்ஆனந்தும் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.