பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: திமுகவினருக்கும் தொடர்பு, பின்னணியில் இவரா?

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை கிளப்பி இருக்கு. இளம் பெண்களை முகநூல் மூலம் பழகி ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதாக சதீஷ், சபரிராஜன், வசந்தகுமாா், திருநாவுக்கரசு ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் பாலியல் வன்கொடுமை தொடா்பாக புகாா் அளித்த இளம் பெண்ணின் குடும்பத்தை மிரட்டியதாகவும், தாக்கியதாகவும் நாகராஜ் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இவர்களுக்கு எல்லாம் அரசியல் பின்புலம் இருக்கு என கூறப்படும் நிலையில், அதிமுக தலைமை நாகராஜை கட்சியில் இருந்து தூக்கி இருக்கு. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு நெருக்கமானோர் சம்பந்தப்பட்டு உள்ளதாக கூறப்படும் குற்றசாட்டுகளை அவர் மறுத்ததோட மட்டுமில்லாம, டிஜிபி அலுவலகத்துல புகாரும் அளித்திருக்கிறார்.

இதற்கிடையே, சில திமுக புள்ளிகளுக்கும் இந்த குற்றத்தில் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாம, நேற்று அதிமுகவுக்கு எதிரா இந்த விஷயம் சோசியல் மீடியாவுல டிரன்ட் ஆனதுக்கு பின்னாடி திமுக தலைமைக்கு மிக நெருக்கமான பிரமுகர் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், திமுக தலைவர் மு க ஸ்டாலின், சம்பந்தப்பட்டவர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை தேவை என கூறியுள்ளார்.

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம், “பொள்ளாச்சியில், பெண்ணைத் துன்புறுத்தல் செய்த வழக்கில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு சபரீஷ், சதீஸ், வசந்த குமார் ஆகிய 3 பேர் பிப்ரவரி 24-ம் தேதி கைது செய்யப்பட்டார். வழக்கின் முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசு கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். புகார்தாரரின் சகோதரரை மிரட்டியதற்காக, நாகராஜ், செந்தில், வசந்தகுமார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்ணைத் துன்புறுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும், குண்டர் தடுப்புச் சட்டப் பிரிவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பில்லை. அரசியல் தொடர்பும் இல்லை. இது தொடர்பாக தவறான செய்தி பரப்புவது தவறு. அப்படிச் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறியுள்ளார்.

மேலும், இரண்டு ஆண்டுகளாக தற்கொலை செய்துக்கொண்ட பெண்களின் விபரங்களை எடுத்தும் விசாரிக்கப்படும் என்றும் முதற்கட்ட விசாரணையிலேயே குற்றவாளிகளிடம் இருந்து தேவையான தகவல்கள் கிடைத்துள்ளது, தேவைப்பட்டால் குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கில், போலீசில் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை தாக்கியதாக அதிமுக கட்சியே சேர்ந்த நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, அதிமுக கட்சியின் கொள்கைக்கும் குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் ஏ.நாகராஜ் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.