டிரென்ட் ஆன நேசமணி: பின்னணியில் திமுக?

#PrayForNesamani நேற்றிலிருந்து இந்தியா ட்ரெண்டிங் இதுதான். ஒரு சின்ன விளையாட்டாய், அதாவது ஒரு க்ரூப்பில் ஒரு சுத்தியலின் படத்தை பதிவிட்டு உங்கள் ஊரில் இதன் பெயர் என்ன என கேட்கப்பட்டிருந்தது. அதற்கு ஒருவர் இதற்கு பெயர் சுத்தியல். இதை எதன்மீதாவது அடித்தால் ‘டங்க் டங்க்’ என சத்தம் வரும்.

பெயிண்டிங் காண்ட்ராக்டர் நேசமணி (பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு) ஜமீன் மாளிகையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது அவரது அண்ணன் மகன், அவர் தலையில் போட்டுவிட்டார். இதனால் அவரது தலை உடைந்துவிட்டது. பாவம் என பதிவிட்டிருந்தார். இங்குதான் தொடங்கியது, அதன்பிறகு தமிழ்நாடு ட்ரெண்டிங், இந்தியா ட்ரெண்டிங் என உலகம் முழுவதும் சென்றுவிட்டது.

இதன் மூலம் தமிழக அரசியல், இந்திய அரசியல், மோடி என ட்விட்டரில் இருந்த ட்ரெண்டை மாற்றி அமைத்திருக்கிறார், வடிவேலு. சமூக வலைதளங்களில் வெளியாகும் மீம்களில் பெரும்பான்மையானவை இவரின் புகைப்படங்களை ஏந்தியே இருந்தன.

உலகளவிலான ட்ரெண்டிங்கில் 3-வது இடத்திலும், இந்திய அளவில் முதலிடத்திலும் நேசமணி டிரன்டிங்கில் இருந்தது. இந்தியா முழுவதும் மோடியை பதவியேற்பு நிகழ்ச்சியை உற்று நோக்கியிருந்த நிலையில் ஓவர் நைட்டில் ஒபாமாவாக மாறிய வடிவேலுவின் பின்னணியில் திமுக இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

தானாய் டிரன்ட்டான ஒன்றை மோடி பதவியேற்பு அன்று பாஜகவை வெறுப்பேற்ற திமுக ஆதரவாளர்கள் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மீம் கிரியேட்டர்களுக்குப் பஞ்சம் வரும்போதெல்லாம் வடிவேலுவின் பழைய காமெடிக் காட்சிகளைத்தான் தூசுதட்டுவர். அப்படித் தேர்தல் முடிந்து கொஞ்சம் வறட்சியில் இருந்த நெட்டிசன்களுக்குக் கிடைத்த பம்பர் பரிசுதான் இந்த #Pray_for_Neasamani ஹேஷ்டேக்.

கோபாலு கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சார்லி ட்ரெண்டிங் குறித்து பேசுகையில், “இந்தக் காட்சியை படமாக்கும் போதே நல்லா வரும் என்று சொன்னவர் இயக்குநர் சித்திக் தான். அவர் ரொம்ப ஹுயூமர் சென்ஸ் உள்ளவர். நாங்கள் அந்தப் படத்தில் மிகவும் ஜாலியாக பணியாற்றினோம். நகைச்சுவைக்கு காலங்கள், வருடங்கள் என்றெல்லாம் இல்லை” என்றார்.

படத்தில் கிருஷ்ண மூர்த்தி கேரக்டரில் நடித்த ரமேஷ் கண்ணா கூறுகையில், “நான் எனது சித்தப்பா மீது சுத்தியல் போட்டதை கேட்கிறீர்களே அவர் நான் கனவு காணும் போது எட்டி உதைத்தாரே ? அது நியாயமா? என கேள்வி எழுப்பியுள்ளார். வடிவேலுவோ கூலாக, இதெல்லாம் கடவுளின் கருணை என்று கூறியுள்ளார்.