டிஸ்னி+ ஹாட்ஸ்டார் “சூக்ஷ்மதர்ஷினி” திரைப்படத்தை, ஸ்ட்ரீம் செய்து வருகிறது

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த “சூக்ஷ்மதர்ஷினி” எனும் அட்டகாசமான ஃபேமிலி டிராமா திரில்லரை, கடந்த ஜனவரி 11 முதல் ஸ்ட்ரீம் செய்து வருகிறது. நஸ்ரியா நடிப்பில், இந்த மிஸ்டரி த்ரில்லர் திரைப்படத்தினை, அதுல் ராமச்சந்திரன் மற்றும் லிபின் டி.பி. எழுத்தில், எம்.சி. ஜித்தின் இயக்கத்தில், ஹாப்பி ஹவர்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஏவிஏ புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

முன்னணி நடிகை நஸ்ரியா நஜிம், சிறு இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இப்படத்தில் முதன்மைப் பாத்திரம் ஏற்றுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில், படத்தின் மீது பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது. பாசில் ஜோசப், அகிலா பார்கவன், மெரின் பிலிப், பூஜா மோகன்ராஜ், சித்தார்த் பரதன், தீபக் பரம்போல், மனோஹரி ஜாய், அபிராம் ராதாகிருஷ்ணன், ஜனனி ராம் (டயானாவாக), ஹெஸ்ஸா மேஹக் மற்றும் சரஸ்வதி மேனன் உட்பட ஒரு பெரும் நட்சத்திரம் கூட்டம் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

கிறிஸ்டோ சேவியரின் இசையில், சமன் சாக்கோவின் படத்தொகுப்பில், சூக்ஷ்மதர்ஷினி ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக உருவாகியுள்ளது. இப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்த பரபரப்பான ஃபேமிலி டிராமா திரில்லரைத் தவறவிடாதீர்கள். டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் சூக்ஷ்மதர்ஷினி பார்த்துக் கொண்டாடுங்கள் !

Share this:

Exit mobile version