இயக்குநர் Ar. காந்தி கிருஷ்ணாவின் ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்பட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!

YouTube Poster

கடும் கோடை வெயிலில் இதம் தரும் தென்றலை போல காதல், நெகிழ்ச்சி மற்றும் மனதை வருடும் உணர்வுகளோடு ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆத்மார்த்தமான ரொமாண்டிக் அனுபவத்தை இந்தப் படத்தில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா தர இருக்கிறார் என்பது டீசரில் தெளிவாகியுள்ளது.

சினிமா ரசிகர்களிடையே இன்றும் தனி இடம் பிடித்துள்ள ‘செல்லமே’ மற்றும் ‘ஆனந்த தாண்டவம்’ போன்ற படங்களில் தனது தனித்துவமான கதை சொல்லலுக்காகப் புகழ்பெற்ற இயக்குநர் காந்தி கிருஷ்ணா, ’பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படம் மூலம் கம்பேக் கொடுக்கிறார். இந்த ரொமாண்டிக் கதையில் பிக்பாஸ் புகழ் ராணவ் மற்றும் ரோஸ்மின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில், இந்தப் படத்தின் டீசரை நடிகை ரீமா சென் வெளியிட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, வெளியான இந்த டீசரில் உரையாடல்களை விட காட்சிகளை முன்னிலைப்படுத்தி அதில் உணர்வுகள் முழுமையாக வெளிப்படும் விதமாக அமைந்துள்ளது. இதனை விமர்சகர்களும் ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீடு குறித்த விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர்கள்: ராணா, ரோஸ்மின், சம்பத் குமார், கஸ்தூரி, அர்ச்சனா, கிருத்திக் மோகன் மற்றும் அமிதா ரங்கநாத்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

எழுத்து, இயக்கம்: Ar. காந்தி கிருஷ்ணா,
தயாரிப்பு: கிரிஜா வரதராஜ்,
தயாரிப்பு பேனர்: பிரேம் கிளாசிக் பிக்சர்ஸ்,
இசை: ஜிவி பிரகாஷ்,
ஒளிப்பதிவு: எம்.வி. பன்னீர் செல்வம்.

Exit mobile version