“கன்னி மாடம்” படத்தின் மூலம் தனது திறமையை நிரூபித்த போஸ் வெங்கட்!!

வளர்ந்து வரும் இயக்குனர், நடிகர் இயக்கிய படம் கன்னி மாடம் !! அந்த படம் வெளிவந்த சில தினங்களிலே  பெரும் வரவேற்பைப் பெற்றது… மேலும் முதல் படத்தில் முத்திரை படைப்பது பெரும் சவாலாக இருந்து வரும் இக்காலகட்டத்தில் தனது முதல் படத்திலேயே அதன் இயக்குனருக்கு அதிக விருதுகளை பெற்று தந்தது அப்படம்.  இயக்குனர் போஸ் வெங்கட் அவர்கள் இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன..அவர் தற்போது அடுத்தடுத்த படங்களை இயக்க தயாராக உள்ளார்… இது போன்ற தரமான படைப்புகள் அவரிடமிருந்து வருமென எதிர்பார்ப்பு நிலவுகிறது.