V. C.வடிவுடையான் இயக்கி கதையின் நாயகனாக நடிக்கும் “குத்தா ” பத்து மொழிகளில் தயாராகிறது.

R.விஷன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மிகுந்த பொருட்செலவில் V.C.வடிவுடையான் கதை, திரைக்கதை அமைத்து தயாரித்து, இயக்கி, கதையின் நாயகனாக நடிக்கும் படத்திற்கு ” குத்தா ” என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளார்.

பல மொழிகளில் பிரபலமான நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

பிரமாண்டமாக தயாரிக்கப்படும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, போஜ்புரி, சைனீஸ், ஆங்கிலம், ரஷ்யன் என பத்து மொழிகளில் தயாராகிறது.

நாயின் வெறித்தனமான ஆக்க்ஷன் காட்சிகள் அதிகம் இருப்பதால் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஃபைட் மாஸ்டரான ராம் லெக்ஷ்மணன் இரட்டையர்கள் இப்படத்தின் சண்டை காட்சிகளை கவனிக்கிறார்கள்.

படத்தில் அரை மணிநேரம் பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெறுவதால் அந்த பணியை சைனாவில் உள்ள குக்கியா கவாசி என்ற கிராபிக்ஸ் நிறுவனம் மேற்கொள்கிறது.
அம்ரீஷ் இசையமைக்க,R.ப்ரணவ் ஒளிப்பதிவு செய்ய கலை P. சண்முகம், எடிட்டிங் இளையராஜா, தயாரிப்பு நிர்வாகம் G.சங்கர். மக்கள் தொடர்பு – மணவை புவன்.

படம் பற்றி இயக்குனர் V.C.வடிவுடையான் பகிர்ந்தவை…

உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட மிகவும் ஆபத்தான பிட் புல் நாயை மையப்படுத்தி ஆக்க்ஷன், கிரைம், த்ரில்லர் திரைப்படமாக இதை உருவாக்கி வருகிறோம்.

இம்மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ப்லிம் சிட்டியில் தொடங்குகிறது என்றார் இயக்குனர்
V. C.வடிவுடையான்.

Share this:

Exit mobile version