கருணாநிதி தமிழர் இல்லை என்று குஷ்பு சொன்னாரா இல்லையா?

கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆகியோர் தமிழரே கிடையாதுனு குஷ்பு சொன்னதா ஒரு புலனாய்வு இதழ் செய்தி வெளியிட, கொந்தளித்து போன குஷ்பு தான் அப்படி சொல்லவே இல்லை, இது தனக்கும் திமுகவுக்கும் சிண்டு முடியும் வேலை, அந்த பத்திரிகையை கோர்ட்டுக்கு இழுத்தே தீருவேன்னு தாம் தூம்னு ட்விட்டர்ல கொந்தளிச்சு இருக்கார்.

இதுக்கிடையில, குஷ்பு பேசியாதா ஒரு ஆடியோ வாட்ஸாப்புல உலா வருது. அதுல அவர், கலைஞர், எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவங்க கிடையாது, இப்படி இருக்கும் போது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வர்றதுல என்ன தப்புனு பேசி இருக்கார்.

ஆரம்பத்துல அதிமுக அனுதாபியா இருந்த குஷ்பு, பிறகு திமுகவுல சேர்ந்தார். அங்கே சில வருடங்கள் இருந்துட்டு, காங்கிரஸுக்கு சென்ற அவர், இப்போ அந்த தேசிய கட்சியில செய்தி தொடர்பாளரா இருக்கார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிக்க குஷ்பு பிளான் பண்றதாகவும், சென்னையிலியே நிக்க விரும்புவதாகவும் ஒரு தகவல் அடிபடுது.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் நாங்கள் யாரும் கோஷ்டி பார்க்கவில்லை. காங்கிரசில் எல்லாருக்கும் ராகுல் காந்தி மட்டும் தான் தலைவர். இளம் தலைமுறையினருக்கு கட்சியில் உயர்பதவி அளித்தது நல்ல வி‌ஷயம்.

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சியினர் யாரும் ஏற்க மாட்டோம் என்று சொல்லவில்லை. உரிய நேரத்தில் கூட்டணி கட்சிகள் பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்வார்கள்”னு சொன்னார்.

மேலும் அவர், “பிரியங்கா காந்தி என்கிற சிங்கம் களத்தில் இறங்கி உள்ளது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய 2 பேரும் சேர்ந்து நல்ல செயல்பாட்டை தருவதன் மூலம் புது இந்தியா பிறக்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்”னு நம்பிக்கை தெரிவிச்சார்.

அது மட்டுமில்லாம, “கடந்த 2012-ம் ஆண்டு முதல் ராபர்ட் வதேரா மீது குற்றம் சொல்லி வருகின்றனர். நிரவ் மோடி, லலித் மோடி, விஜய் மல்லையா போல் அவர் ஓடிப்போகவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக பா.ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கும் போதும் ராபர்ட் வதேரா இங்கு தான் உள்ளார்”னும் குஷ்பு சொன்னார்.

பாராளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று கூறிய அவர், காங்கிரஸ் கட்சிக்கு பெருகி வரும் ஆதரவை கண்டு பிரதமர் மோடி பயந்து போய் உள்ளார். ‘கோபேக் மோடி’ என நாடெங்கிலும் ஒலித்து கொண்டிருக்கிறது. மோடியின் கையாட்டி பொம்மையாக இங்குள்ள அ.தி.மு.க. அரசு உள்ளது‍னு தெரிவிச்சார்.