வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் சார்பாக கொரோனா விழிப்புணர்வுப் பொம்மைகள் வழங்கப்பட்டன.

வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் சார்பாக கொரோனா விழிப்புணர்வுப் பொம்மைகள் சென்னை மேற்கு மண்டல போக்குவரத்துக் காவல் துணை ஆணையரிடம் வழங்கப்பட்டன.
கொரானாவுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் வேலம்மாள் கல்விக் குழுமத்தின் சார்பாக 13 கொரோனா விழிப்புணர்வுப் பொம்மைகள் 19.06.2020 அன்று சென்னை மேற்கு மண்டல போக்குவரத்துக் காவல் துணை ஆணையர் திரு M. அசோக் குமார்அவர்களிடம் முகப்பேர் வேலம்மாள் பள்ளி முதல்வர் திரு.பொன்மதி அவர்களால் வழங்கப்பட்டது.
இக்கொரானா காலகட்டத்தில்மக்களுக்காகப் பல்வேறு உதவிகளைச் செய்து வரும் வேலம்மாள் கல்விக் குழுமத்தின் மற்றுமொரு சமூக விழிப்புணர்வு நிகழ்வாக இது அமைந்தது.