கலகலக்கும் கமல் கட்சி: பின்னணியில் திமுக?

கருணாநிதி காலம் வரை திமுகவுடன் மிக நெருக்கமாக இருந்த கமல் ஹாசன், கட்சி தலைவர் ஆன பிறகும் ஓரளவுக்கு நல்ல நட்பில் தான் இருந்தார். ஆனால், சமீபத்தில் அவர் தெரிவித்த கருத்துகளும் அவரின் நடவடிக்கைகளும் திமுக தலைமைக்கு பெரிதும் எரிச்சலூட்டின.

இதைத் தொடர்ந்து, தன்னுடைய அரசியல் எதிரிகளுக்கு திமுக வழக்கமாக என்ன செய்யுமோ, அதையே மக்கள் நீதி மய்யத்துக்கும் செய்ய ஆரம்பித்து விட்டதாக ‘ஆண்டவரின்’ ஆட்கள் பேசிக்கொள்கிறார்கள்.

அதாவது, தொழிலதிபர் குமாரவேல் மய்யத்திலிருந்து விலகியதற்கு பின்னணியில் திமுக இருப்பதாக அவர்கள் சந்தேகப்படுகிறார்கள். குமாரவேலின் சகோதரர் திமுக தலைமையின் உறவினர் எனக் கூறும் அவர்கள், இந்த தொடர்பு மூலம் தான் அவரை வெளியேற வைத்ததாக ஆதங்கப்படுகிறார்கள்.

இதற்கிடையே, மநீமவோ, குமரவேல் ஏன் விலகினார்னு ஒரு அறிக்கை கொடுத்திருக்கு. அதில், “மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், 2019 பாராளுமன்றத் ததர்தலில் போட்டியிட விருப்பமனு
அளித்தவர்களுக்காை நேர்காணல், கடந்த ஒரு வார காலமாக நனடபெற்று வந்தது.

அந்த நேர்காணல் முடிவு சபறாத தவனளயில், திரு குமாரவேல் அவர்களின் ச‌மூக வனலத்தளங்களில் குறிப்பாக பேஸ்புக் பக்கத்தில், அவர் கடலூர் பாராளுமன்றத் நதர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியிட்டிருந்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறும் செயல்களை எவ்விதத்திலும் அனுமதிக்காது. ஜன‌நாயக முறைப்படி, வேட்பாளர் விருப்பமனு பெறப்பட்டு, அவர்களுக்கு நேர்காணல் நனடபெற்றுக்கொண்டிருக்கையில், இன்னும் பல நூறு மனுதாரர்கள் தங்களின் நேர்காணலுக்காக காத்திருக்கின்ற சூழலில், நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிட உள்ள‌தாக திரு குமாரவேல் அறிவித்து இருப்பது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல்.

இந்நிலையில், குமாரவேல் அவர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டபொழுது, அவர் அளித்த விள‌க்கம் ஏற்றுக்கொள்ள‌க்கூடிய வளகயில் இல்லை. தலைமை அறிவிப்பதற்கு முன்னரே, தன்னைத் தானே வேட்பாளராக வெளிப்படுத்திக்கொள்வது
கட்சிக் கட்டுப்பாட்டிற்கு முரணான ஒரு செயல் என்பதே கட்சியின் நிலைப்பாடு.

ஜனநாயக‌ முளறப்படி நடைபெற்ற ஒரு வேட்பாள‌ர் தேர்வுமுறைக்கு, ஊறு விளைவிக்கும் வளகயில் குமாரவேல் அவர்கள் செயல்பட்டதால், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது,” என கூறப்பட்டுள்ளது.