கண்டன அறிக்கை

தேதி : 14.05.2026
கண்டன அறிக்கை
மதிப்பிற்குரிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு,  
“ஜனநாயகன்” படம் சமூக ஊடகங்களில் கள்ளத்தனமாய் வெளிவந்து ஏற்பட்ட காயம் ஆறுமுன்பே  இன்று பேரடியாக திரு.சூர்யா அவர்களின் படமான “கருப்பு” திரைப்படம் வடமாநிலங்கள் சிலவற்றில் அதிகாரபூர்வமாய் வெளியாகும் முன்பே திரையரங்குகளில் திரையிடப்பட்டது. தமிழ்சினிமா மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறது.
150 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு திரைப்படத்தை இப்படி கவனக்குறைவாய் எப்படி ஒரு பெரும் நிறுவனம் கசியவிட்டிருக்கும் என்ற ஒரு ஐயமும் நம்பிக்கையின் பேரில் கேள்விகுறியும் எழுகிறது. பாதிக்கப்பட்ட தயாரிப்பாளருக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் அதற்கான ஈட்டை சரிசெய்ய முற்படவேண்டும் அதுமட்டுமில்லாமல் கசிய விட்டவர்களை கடுமையாக தண்டித்து வருங்காலத்தில் கவனக்குறைவிற்கு இது ஒரு உதாரணமாக இருக்கவேண்டும்  என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. 
இதில் பல கோடிகள் மட்டுமல்ல பல கலைஞர்களின், தொழிலாளர்களின் வியர்வை சிந்திய உழைப்பும் எதிர்காலத்தை பற்றிய கனவும் உள்ளடங்கியிருக்கிறது. வருங்காலத்தில் இது சம்பந்தமான கடுமையான விதிமுறைகளும் வழிமுறைகளும் வகுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இச்சூழலில் தமிழ் திரையுலகின் அங்கத்தினர்கள் யாவரும் ஒன்றாய் நின்று கண்டிக்கவும் போராடவும் தயாராக நிற்கிறோம். இத்தருணத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் தயாரிப்பாளர்களுக்கு என்றும் போல் துணையாய் நின்று குரல் கொடுக்க தவறாது.
#தென்னிந்திய நடிகர் சங்கம்.
SIAA Press Release 14-05-26
Exit mobile version