இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்த *சேத்துமான்* திரைப்படம் மே 27ம் சோனி லைவ் வில் வெளியாகிறது.

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக திரைப்படங்கள் தயாரித்துவருகிறார்.
பரியேறும் பெருமாள், குண்டு, ரைட்டர், குதிரைவால், சார்பட்டாபரம்பரை , உள்ளிட்ட படங்கள் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தன.
இந்நிலையில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி எனும் சிறுகதை  “சேத்துமான்” எனும் பெயரில் திரைப்படமாக தயாரிக்க நீலம் புரொடக்சன்ஸ் முன்வந்தது.  அறிமுக இயக்குனர் தமிழ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். வசனத்தை எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ளார். இந்த படத்தில் பிந்து மாலினி இசயமைப்பாளராகவும், CS பிரேம் குமார் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்
புனே சர்வதேசத் திரைப்பட விழா, கேரளா சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது.
சென்னை திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் பெற்றிருந்தது.
தாத்தாவிற்கும் பேரனுக்கும் இடையிலான மாசற்ற அன்பைப் பேசும் இப்படத்தில் தாத்தாவாக மாணிக்கமும், பேரனாக அஷ்வினும் நடித்துள்ளனர்.
பல்வேறு திரைப்படவிழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை பெற்ற சேத்துமான் சிறந்த தயாரிப்புக்கான விருதையும் பெற்றது .
இந்த மாதம் மே 27 ம் தேதி சோனி லைவ் வில் திரைப்படம் வெளியாகிறது

Share this:

Exit mobile version