‘பிரேக்கிங் நியூஸ் 2’ ( கனிமொழி)

பெரிய திரையுலகம் போலவே குறும்பட உலகமும் இன்னொருபக்கம் விரிவாகி வருகிறது.
சில குறும்படங்கள் திரைப்படங்களுக்கான முன்னோட்டமாக அமைந்து இயக்குநருக்குத் திரைப்பட வாய்ப்புகளைத் தேடிக் கொடுக்கின்றன. இச்சூழலில் சஸ்பென்ஸ் திரில்லராக   ‘பிரேக்கிங் நியூஸ் 2’ என்கிற குறும் படம் ஒன்று உருவாகி இருக்கிறது.
இப்படத்திற்குக் கதை திரைக்கதை எழுதி சுகன் இயக்கியிருக்கிறார்.
இதில் பிரவீன் பிரதான வேடம் ஏற்று நடித்துள்ளார் . விஜய் டிவியின்  ‘பாரதிகண்ணம்மா’, ‘ஈரமான ரோஜாவே ‘  தொடர்களின் நடித்தவர். நாயகியாக நடித்துள்ள அர்ச்சனாவும்  சின்னத்திரை பிரபலம் தான்.
இன்று  குணச்சித்திரவேடங்களில் திரைப்படங்களில் கலக்கிக் கொண்டிருக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ புகழ் தீபா சங்கர் நடித்துள்ளார். ‘மாஸ்டர்’படத்தில் விஜய்யை கைது செய்யும் இன்ஸ்பெக்டராக நடித்த சண்முகம் அழுத்தமான பாத்திரம் ஏற்றுள்ளார். இவர்கள் தவிர சுந்தர்,பிரதோஷ், பிரகாஷ், பிரபா, ஞானபிரகாஷ், ஸ்ரீவித்யா,  பூங்கொடி அரசி, ராஜேஷ், பரமா, யோகராஜ், சந்துரு ,நிவேதா, மகாலட்சுமி, அனிதா, தீபா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை ரத்னா சினிமாஸ் தயாரித்துள்ளது .
இசை- விபின்,ஒளிப்பதிவு – இளையராஜா , எடிட்டிங்- அர்ஜுன் – ராஜ்குமார், வசனம்- அருள், ஸ்பெஷல் எஃபெக்ட்- முருகன் , டைட்டில் -கணபதி, மக்கள் தொடர்பு- சக்தி சரவணன்.
நாட்டில் நிகழும் குற்றச் சம்பவங்களை மையமாக வைத்து பரபரப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் குறும் படமாக இது உருவாகி உள்ளது .
இதன் இயக்குநர் சுகன் ஏற்கெனவே ‘பிரேக்கிங் நியூஸ்’ என்ற பெயரில்   இயக்கிய குறும்படம் ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வெற்றி பெற்றது. 
‘பிரேக்கிங்  நியூஸ்’   தலைப்பில் தொடர்ந்து வரிசையாகக் திரைப்படங்களை எடுக்கும் எண்ணத்தில் உள்ளனர் இயக்குநர், அடுத்ததாக இயக்கியிருக்கும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெறும் என நம்புகிறது படக்குழு . இத்தொடர் வரிசையில் இருபது கதைகள் தன்னிடம் உள்ளதாகக் கூறுகிறார் இயக்குநர் சுகன்.
படத்தின் கதையைக் கேட்டுப் பிடித்துப் போனதால் மன்னர் திரைப்படத்தின்  தயாரிப்பாளர் இக்குறும்படத்தைத் தயாரித்து ஊக்கப்படுத்தியுள்ளார்.
 ‘பிரேக் நியூஸ் 2’ கனிமொழி  விரைவில் வலைத்தளங்களில் கலக்கப்போகிறது.
Breaking News 2 Trailer