“பாம்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!
GEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!
GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்”.
வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
GEMBRIO PICTURES சார்பில் ஷரைலி பாலகிருஷ்ணன் பேசியதாவது…
எங்கள் படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இது எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம். இந்தப்படம் பார்த்தபோது எங்களு…
இயக்குநர் ஶ்ரீகணேஷ் …
விஷாலின் முதல் படம் எனக்கு ரொம்ப பிடிச்ச படம். அவரை தேடி கால் செய்து பேசினேன். அவரின் இந்தப்படம் வெற்றிப்படமாக இருக்கும் என்பது இங்கு பேசியவர்கள் மனதிலிருந்து தெரிகிறது. அர்ஜூன் தாஸுக்கு இந்தப்படம் அவரை புது டைமென்ஷனில் பார்க்கும் படமாக இருக்கும். டி. இமான் சார் செய்யும் புது விஷயம் – இவ்வளவு புதுமுக பாடகர்களுக்கு வாய்ப்பு தருவது மிகப்பெரிய விஷயம். காளி அண்ணா இந்தியாவில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருத்தர். அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குநர் சிபி சக்கரவர்த்தி …
விஷால் பிரதர் கதை சொன்ன போது யார் நடிக்கிறார்கள் எனக் கேட்டேன், அர்ஜூன் தாஸ் என்று சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் படம் பார்த்து அசந்து விட்டேன். வில்லன் நடிகர் இன்னொசன்ஸை செய்வதை இந்தியாவிலேயே சிறப்பாக செய்பவர் ரஜினி சார். அவருக்கு அப்புறம் அர்ஜூன் தாஸ் தான். காளி வெங்கட் அண்ணன் டான் பைலட் ஃபிலிமில் எந்த தயக்கமும் இல்லாமல் நடித்து தந்தார். சினிமாவை உண்மையாக நேசிப்பவர், அவர் திறமைக்கு ஏற்ற கதாப்பாத்திரங்கள் அவருக்குக் கிடைக்கவில்லை. விஷால் வெங்கட்டும் நானும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். இப்படத்தில் அவர் இயக்குநராக இல்லாமல் எல்லா வேலையும் பார்த்துள்ளார். இந்தப்படம் மிகப்பெரிய விஷயத்தை மிக எளிமையாகப் பேசுகிறது. கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
நடிகர் மணிகண்டன் …
இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருமே என் நெருங்கிய நண்பர்கள் தான். கிட்டதட்ட எல்லா துறையில் வேலை பார்த்தவர்களும் என் நண்பர்கள். அவர்கள் எல்லோரும் இப்படத்தில் வேலை பார்த்துள்ளார்கள் என்பது மகிழ்ச்சி. காளி அண்ணா யார் என்ன உதவி, எந்த சமயத்தில் கேட்டாலும் செய்யத் தயங்காதவர். அவரைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் பத்தாது. இமான் சார் வெரைட்டியான சாங்ஸ் தரும் வெகு சில இசையமைப்பாளர்களில் ஒருத்தர். அவர் இசையமைத்தது மகிழ்ச்சி. இப்படி ஒரு கதையைத் தயாரித்த தயாரிப்பாளருக்கு நன்றி. அர்ஜூன் தாஸ் அவர் முதல் படத்திலேயே எப்படி அவ்வளவு கான்ஃபிடன்ஸ்-ஆ அந்த கதாப்பாத்திரத்தை செய்தார் என ஆச்சரியமாக இருந்தது. தொடரும் அவர் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஷிவாத்மிகா அருமையாக நடித்துள்ளார். விஷால் வெங்கட் 2008 ல் இருந்து பழக்கம். அவன் அனுபவித்த தடைகளை, அனுபவித்த வலிகளை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். அவன் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன். அவன் வெற்றி எனக்கு மிகப்பெரிய பெருமை. இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றிபெறும். நன்றி.
நடிகை ஷிவாத்மிகா …
எனக்கு வாய்ப்பு தந்த சுகுமார் சார், சுதா மேம் இருவருக்கும் நன்றி. இமான் சார் இசைக்கு நான் ரசிகை. அவர் இசையில் நடித்தது மகிழ்ச்சி. காளி வெங்கட் சார் மாதிரியான ஒரு நடிகரோடு நடித்தது பெருமை. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. விஷால் சார் பல தடங்கல்களைத் தாண்டி இந்தப்படம் செய்துள்ளார். எங்களை விட அவருக்காக இப்படம் பெரிய வெற்றி பெறும். என்னை இந்த கதாபாத்திரத்திற்காக நம்பியதற்கு நன்றி. அர்ஜூன் தாஸ் நல்ல நண்பராகக் கிடைத்துள்ளார். அவருடன் நடித்ததும் மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் விஷால் வெங்கட் …
GEMBRIO PICTURES சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் இருவருக்கும் பெரிய நன்றி. ஒரு ஐடியா மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பளிப்பது மிகப்பெரிய விஷயம், என்னை நம்பி இன்று வரை ஆதரவாக இருக்கிறார்கள் நன்றி. அர்ஜூன் தாஸுக்கு இந்தக் கதை சொன்னேன், அவர் என்னை நம்பியதற்கு நன்றி. கதை எழுதியது முதல் ஷிவாத்மிகா தான் என் மைண்டில் இருந்தார், சிறப்பாக நடித்து தந்ததற்கு நன்றி. காளிவெங்கட் சாரிடம் கதை சொன்ன போது அவர் நடிப்பாரா எனச் சந்தேகம் இருந்தது. படம் முழுக்க பிணமாக நடிக்க வேண்டும், மூச்சு விடக்கூடாது – ஆனால் அசத்தியிருக்கிறார். சிங்கம்புலி சாரை நிறையக் கஷ்டப்படுத்தியுள்ளோம், சகித்துக்கொண்டதற்கு நன்றி. நாசர் சார் என் படத்தில் ஒரு ஃப்ரேமிலாவது இருக்க வேண்டும் என ஆசைப்படுவேன், அதே போல் தான் அபிராமி மேடமும். இருவருக்கும் நன்றி. ராஜ்குமார் – கேமரா பற்றி எதுவுமே தெரியாத ஆள்; நான் இயக்கம் என்றால் என்னவென்று தெரியாத ஆள். ஆனால் நாங்கள் படித்து இப்போது இந்த மேடையில் ஒளிப்பதிவாளராக, இயக்குநராக இருக்கிறோம் – மகிழ்ச்சி. இப்படத்தில் எனக்காக உழைத்துத் தந்த அனைவருக்கும் நன்றி. செப்டம்பர் 12 இந்தப்படம் திரைக்கு வருகிறது. உங்கள் எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்குமென நம்புகிறேன். ஆதரவு தாருங்கள். நன்றி.
நடிகர் அர்ஜூன் தாஸ் …
எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும். இந்த கதாப்பாத்திரம் தந்த விஷாலுக்கு நன்றி. இங்கு வந்து வாழ்த்தும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. GEMBRIO PICTURES சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் இருவருக்கும் நன்றி. இருவரும் டீம்-ஓடு ஷூட்டில் கலந்துகொண்டு ஆதரவு தந்ததற்கு நன்றி. விஷால் – இமான் சார் தான் இசை என்றவுடன், அவர் படத்தைப் பார்த்துக்கொள்வார் என்று சொன்னேன். காளி வெங்கட் சார், அநீதி படத்தில் நடித்திருந்தாலும் அதில் ஒன்றாக நடிக்கவில்லை, ஆனால் இப்படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் நான் லீட் இல்லை, விஷால் அவர் டீம் தான் லீட். நான் ஒரு குட்டி பார்ட். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். ஷிவாத்மிகா அருமையாக நடித்துள்ளார், அவருடன் வேலை பார்த்தது சந்தோஷம். விஷால் கதை சொன்னவுடன் – “நான் தான் பண்ணனுமா?” எனக் கேட்டேன். எல்லோரும் சொல்லியும் என்னை நம்பி தந்ததற்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
இப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளது.
நடிகர்கள்:
அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, ரமேஷ் திலக், பால சரவணன்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:
இயக்கம் – விஷால் வெங்கட்
தயாரிப்பு – சுதா சுகுமார்
இசை – டி. இமான்
கதை & திரைக்கதை – மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன், விஷால் வெங்கட்
வசனம் – மகிழ்நன் BM
ஒளிப்பதிவு – P.M. ராஜ்குமார்
படத்தொகுப்பு – G.K. பிரசன்னா
கலை இயக்கம் – மனோஜ் குமார்
உடை வடிவமைப்பு – பிரியா ஹரி, பிரியா கரண்
நடன அமைப்பு – அப்ஸர்
சண்டைப்பயிற்சி – முகேஷ்
மக்கள் தொடர்பு – சதீஸ் (AIM)
நிர்வாகத் தயாரிப்பாளர் – D. சரவண குமார்