எந்த தண்ணி? எக்குத்தப்பான கேள்வி, எகிறிய பிக் பாஸ் நடிகை

கடந்த ஆண்டு பிக் பாஸில் பரிசை தட்டி சென்றவர் ரித்விகா. இவர் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடையே கலந்துரையாடலில் ஈடுபட்டார். பலர் பாசிட்டிவாக கேள்விகளை கேட்ட நிலையில், சிலர் ஏடாகூடமாகவும் கேட்டனர்.

உடல் நலத்திற்கு தண்ணீர் அதிகமாக குடியுங்கள் என்று ரித்விகா  ரசிகர்களுக்கு அறிவுரை கூற, இதற்கு ரசிகர் ஒருவர் என்ன தண்ணி என்று கேட்க, கோபமடைந்திருக்கிறார் ரித்விகா.

அது மட்டுமா? மற்றொருவர் நீங்கள் நல்லாவே இல்லை என்று கூற, நீங்களும் பார்ப்பதற்கு நன்றாகவே இல்லை என்று கூறி பதிலடி கொடுத்திருக்கிறார்.

பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்னர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டபட்டது.

சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார்.

அதன் பின்னர் பிக் பாஸ் இரண்டாவது சீசனில்  பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பக்கா தமிழ் பெண்ணாக இருந்த இவர் தற்போது படு மாடர்ன் ஆகியுள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், “அட்டக்கத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ‘கடவர்’ என்ற தலைப்பில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தில் அமலா பாலுடன் நடிக்கிறேன். விஜய் சேதுபதி நடிக்கும் ‘நம்மவன்’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளேன். இப்படம் வெளிவந்ததும் என் கதாப்பாத்திரம் பெரிய அளவில் பேசப்படும்,” என்று கூறியுள்ளார்.