பிக் பாஸ் 3: யாரெல்லாம் உள்ளே? உற்சாகப்படுத்தும் லிஸ்ட்

பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவாக ‘பிக் பாஸ்’ திகழ்கிறது. தற்போது இந்த ஷோவின் மூன்றாம் பாகம் ஆரம்பிக்கவிருக்கிறது.

கமல்ஹாசனின் புரோமோ வீடீயோ வெளியானது முதலே பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்த நிலையில், மூன்றாவது சீசனில் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்களை உறுதி செய்திருப்பதாக தெரிகிறது.

அதன் படி, பிரசன்னா, ஜாங்கிரி மதுமிதா, பவர் ஸ்டார் சீனிவாசன், சஞ்சனா சிங், ஆல்யா மானசா, ரச்சிதா மகாலட்சுமி மற்றும் யூ டியூப் பிரபலம் ஹரி ஆர் பாஸ்கர் ஆகியோர் இடம்பெறுவார்கள் எனத் தெரிகிறது.

இவர்களில் ஜாங்கிரி மதுமிதா முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டின் உள்ளே செல்வார் எனக் கூறப்படுகிறது. சின்னத் திரையில் சின்ன பாப்பா பெரிய பாப்பாவில் காமெடி செய்தவர், சினிமாவிலும் தடம் பதித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு உதவி இயக்குனர் மோசஸ் ஜோயலைத் திருமணம் செய்துகொண்டார்.

மணமாகி கொஞ்ச நாளிலேயே கணவரை மூன்று மாதங்கள் பிரிந்து எப்படி பிக் பாஸ் வீட்டுக்கு’ என்றால், “அவங்களுக்கு சவால்னா ரொம்ப பிடிச்ச வி‌ஷயம். இந்த வாய்ப்பை ஒரு சவாலா எடுத்து பண்ணணும்னு நினைக்கிறாங்க. தவிர, இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்கறதில்லையே! பொதுவாகவே வர்ற வாய்ப்புகளைத் தவற விடக்கூடாதுன்னு நினைக்கிறவங்க அவங்க” என்கின்றனராம் மதுமிதாவுக்கு நெருக்கமானவர்கள்.

இந்நிலையில், மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வசிக்க விரும்புவதாக பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா. முதல் சீசனில் ஜூலியைப் போலவே, இரண்டாம் சீசனில் மக்களிடம் அதிக வெறுப்பைச் சம்பாதித்தவர் ஐஸ்வர்யா தான்.

கமல் தீவிர அரசியலில் ஈடுபட்டதால் இந்த நிகழ்ச்சியின் 3வது சீசனை யார் தொகுத்து வழங்கப்போகிறார் என்ற சந்தேகம் கிளம்பியது. இந்நிலையில் கமலை தொகுத்து வழங்குவது உறுதிபடுத்தும் வகையில் 3வது சீசனுக்கான புரமோவில் கமல் இடம்பெற்றுள்ளார்.