“Bhai – Sleeper Cell” Movie Review

‘ஸ்லீப்பர்செல்’ தீமைகள், திடீர் திருப்பங்கள், ஒரே அறையில் விரியும் மர்மங்கள் – இவை அனைத்தையும் மையமாகக் கொண்டு இயக்குநர் கமல்நாதன் புவன்குமார் உருவாக்கிய சோதனை முயற்சிதான் ‘பாய்’. தீவிரவாத பின்புலம் மற்றும் உளவுத்துறை செயல்பாடுகளை வேறுபட்ட பார்வையில் காட்ட முயற்சி செய்திருக்கிறார்.

முக்கிய கதாபாத்திரமான ஆதவா ஈஸ்வரா, ஆறு அடி உயரம், அகில இந்திய ஆக்ஷன் ஹீரோ தோற்றத்துடன் வருகிறார். அவரின் உடல் அமைப்பும் திரைக்கதை அமைப்பும் பெரிய ஆக்ஷன் அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கலாம். ஆனால், அவரது முழுத் திறமைகள் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகள் திரையில் முழுமையாகப் பதியாதது சற்று குறையாகிறது.

ஒளிப்பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒரே அறைக்குள் மட்டுமே நகரும் காட்சிகளை சலிப்பில்லாமல் பிடித்திருப்பது சிறப்பாகும். ஆக்ஷன் சீன்களின் கோணங்கள், ஒளி – நிழல் விளையாட்டுகள் ஆகியவை படத்தின் தரத்தை உயர்த்துகின்றன. இசையமைப்பாளர் ஜித்தின் கே. ரோஷன் வழங்கிய பின்னணி இசை, கதையின் தீவிரத்தை நிலைநிறுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கதை ‘ஸ்லீப்பர்செல்’ பற்றிய புதிய கோணத்தை முன்வைக்க முயல்கிறது. ஆனாலும், முதல் பாதியில் ஒரே மாதிரியான உரையாடல்கள் மற்றும் சூழ்நிலைகள் மீண்டும் மீண்டும் தோன்றுவதால் சற்றே ஒரேமாதிரித் தன்மை உருவாகிறது. கதையின் வேகம் சில இடங்களில் மந்தமாகும். திரைக்கதை மேலும் கூர்மையுடன், சுருக்கமாக, சிக்கலான திருப்பங்களுடன் அமைந்திருந்தால், ‘பாய்’ வித்தியாசமான ஒரு த்ரில்லர் அனுபவத்தை கொடுத்திருக்க முடியும்.

ஒரே அறையில் சிக்குண்டிருக்கும் மனிதர்களின் மனநிலை, அச்சம், திடீர் தாக்குதல்களின் அச்சுறுத்தல் ஆகியவற்றை படத்தில் வெளிப்படுத்தும் முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால், கதையின் பிணைப்பில் சீரான ஓட்டம் இல்லாததால் சில இடங்களில் தீவிரம் குறைகிறது.

எனினும், வழக்கமான படவட்டத்தில் இருந்து விலகி, குறைந்த இடம், குறைந்த கதாபாத்திரங்கள், தீவிரமான கருப்பொருள் ஆகியவற்றுடன் சோதனை செய்யும் இந்த முயற்சி குறிப்பிடத்தக்கது. புதுமையான சிந்தனையையும், வேறுபட்ட காட்சிப்படுத்தலையும் விரும்புவோருக்கு ‘பாய்’ ஒரு பார்வைக்கு தகுதியான படமாகும்

நடிகர்கள்: ஆதவா ஈஷ்வரா, நிக்கேஷா, தீரஜ் கெர், சீமான் அப்பாஸ் மற்றும் பலர்.

தயாரிப்பாளர்: ஸ்ரீ நியா

இயக்குனர்: கமலநாதன் புவன்குமார்

மதிப்பீடு..3.3/5
 
சக்தி சரவணன் PRO
vrcs
 

Exit mobile version