காதலில் விழுந்த அதர்வா?

கடந்த் காலங்களில் சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டாலும், இப்போ ஒருத்தரை அதர்வா சின்சியரா லவ் பண்றதா கோலிவுட் பட்சிகள் கூறுகின்றன. ஆனால் இது கல்யாணம் வரைக்கும் போகுமான்றதை பொறுத்திருந்து தான் பார்க்கணும்னும் அதே பட்சிகள் கூறுகின்றன.

“அதர்வா காதலிப்பது தன் சக நடிகையைத்தான்,” என்று கூறும் அந்த பட்சிகள், அந்த நடிகை தான் அதர்வா மீது முதலில் காதலில் விழுந்தாருன்னும், அவர் தான் புரபோஸ் கூட பண்ணாருன்னும் சொல்லுகின்றன.

அதர்வாவை செல்லமா ‘சாக்லேட் பாய்’னு தான் அந்த நடிகை கூப்புடறாங்க. அவங்க சத்தமாவே இப்படி கூப்புடறதால அதர்வா வெட்கத்துல நெளியறாருன்னு சொல்லும் அந்த வட்டாரங்கள், இந்த காதல் தான் இப்போ கோலிவுட்டுல ஹாட் டாபிக்குனு சொல்றாங்க.

இதற்கிடையே, ஆர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா – மேகா ஆகாஷ், இந்துஜா நடிப்பில் உருவாகி இருக்கும் பூமராங் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அதர்வா, தமிழ் பேசும் நாயகிகள் தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் தேவை என்றார்.

“படத்தை எப்போது ஆரம்பித்து எப்போது முடித்தோம் என தெரியவே இல்லை. அவ்வளவு வேகமாக முடித்து விட்டோம். பூமராங் என்றால் கர்மா. நாம் என்ன செய்தோமோ அது தான் நமக்கு திரும்ப வரும். இந்த படத்தில் பிரச்சார தொனி எதுவும் இருக்காது, எங்கள் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக படத்தை எடுத்திருக்கிறோம்,” என்றார்.

மேலும் அவர், “ரதன் ஒரு சிறந்த இசையமைப்பாளர். அவர் தமிழில் நிறைய படங்கள் இசையமைக்க வேண்டும். இந்துஜா, மேகா ஆகாஷ் இரண்டு பேருக்குமே நல்ல பிரகாசமான எதிர்காலம் உண்டு.

தமிழ் பேசும் நாயகிகள் தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் தேவை. நல்ல கருத்தை தாங்கி இந்த பூமராங் வந்திருக்கிறது, அனைவரையும் சென்று சேரும் என நம்புகிறேன்”, என்றார்.