As per the decision taken in the meeting of the Honble Chief Minister with the District Collectors, District Monitoring Officers appointed for Coimbatore, Tiruppur and Erode for containment of COVID-19

(27.2.2021) மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தலைமைச் செயலகத்தில் கொரோனா  நோய்த்தொற்று  தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திருப்பூர், சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர் களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க, கொரோனா தொற்று  பாதிப்பு அதிகமாக உள்ள கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும், மாவட்ட ஆட்சியர்களுடன் ஒருங்கிணைந்து, கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை கண்காணிக்கவும், இம்மூன்று மாவட்டங்களுக்கும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை நியமித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு திரு.மு. அ.சித்திக், முதன்மைச் செயலாளர் /ஆணையர், வணிகவரித்துறை அவர்களும்; திருப்பூர் மாவட்டத்திற்கு திரு. சமயமூர்த்தி, இ.ஆ.ப., வேளாண்மைத்துறை செயலாளர் அவர்களும்; ஈரோடு மாவட்டத்திற்கு டாக்டர் இரா.செல்வராஜ் இ.ஆ.ப. நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனர் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்

TN_Gov