Arya to invite all his girlfriends, Sayeesha in shock

அனைத்து காதலிகளையும் அழைக்க ஆர்யா முடிவு, ஷாக்கின் சாயிஷா

தன்னோட திருமணம் என்னும் நிக்காவுக்கு, தன்னோட எக்ஸ் கேர்ள் பிரண்ட்ஸ் எல்லாரையும் அழைக்க ஆர்யா பக்கா பிளான் போட்டு இருக்காராம். அது தன் நட்பு வட்டாரத்தோட பெரிய கெட்‍ டுகெதரா இருக்கணும்னு ரொம்பவே மெனக்கெடுறாராம்.

ஆனால் இந்த முடிவுல சாயிஷாவுக்கு அவ்வளவு உடன்பாடு இல்லையாம். ஆண் நண்பர்கள் எத்தனை பேர் வேணும்னாலும் கூப்பிடு, ஆனால் எக்ஸ் எல்லாம் வேண்டாமேன்னு சொல்லி இருக்காராம். ஆனால், ஆர்யா இன்னும் இறுதி முடிவு எடுக்கலையாம்.

ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மார்ச் 10-ல் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஆர்யா தனது நெருங்கிய நண்பர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில், தனது நண்பரும், நடிகருமான விஷாலை நேரில் சென்று அழைத்திருக்கிறார்.

இதுகுறித்த தகவலை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விஷால், “எனக்கு நெருக்கமான புகைப்படமாக இது மாறிவிட்டது. என் நண்பன், அவனது திருமண அழைப்பிழை கொடுக்க வந்த இந்த தருணத்தை என்னால் நம்பவே முடியவில்லை. ஆர்யா – சாயிஷா காதலோடு மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முரட்டு சிங்கிளாகவும், பிளேபாயாகவும் வலம் வந்த‌வர் நடிகர் ஆர்யா. இதற்கு முன் நயன்தாரா மற்றும் பல நடிகைகள் கூட கிசுகிசுக்கப்பட்டார். அதேபோல், எங்க வீட்டு மாப்பிள்ளை டிவி நிகழ்ச்சிகல‌ சில பெண்களை தேர்ந்தெடுத்தார். ஆனால், இறுதி நிகழ்ச்சியில் யாரையும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமில்லை என கூறி எஸ்கேப் ஆனார்.

வனமகன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சயிஷா, தற்போது முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார். கார்த்தியின் ஜோடியாக அவர் நடித்த கடைக்குட்டி சிங்கம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. விஜய் சேதுபதி ஜோடியா ஜுங்கா படத்துலயும் இவர் நடிச்சார்.

சமீபத்துல ஒரு பேட்டியில ஆர்யா பற்றி சாயிஷா கூறும்போது, “ஆர்யா ஒரு ப்ளே பாய், வாலுப்பையன் என பலர் கூறி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் கஜினிகாந்தில் அவருடன் நடித்தபோது எனக்கு அப்படி தோன்றவில்லை. படப்பிடிப்பின் போது ஜாலியாக இருப்பார், அனைவரையும் கிண்டல் செய்வார். ஆனால், அவருடைய மறுப்பக்கத்தைப் பார்த்தால் அவர் மிகவும் சீரியசான மனிதர். மிகவும் குடும்பப்பாங்கானவர். விளையாட்டு, பிட்னெஸ், குடும்பம் என அர்ப்பணிப்புடன் இருப்பார். அன்பானவரும் கூட. அவருடன் நடிப்பது வசதியாக இருக்கும்”னு சொன்னார்.